Last Updated:

Ajith | “இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு இது ஒரு முக்கியமான தருமணம் மட்டுமல்லாமல் பெருமைமிகு தருணம்” என பதிவிட்டுள்ளார்.

News18

நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “அன்பான அஜித்குமாருக்கு வாழ்த்துகள். நீங்கள் சாதித்து காட்டியுள்ளீர்கள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும். லவ் யூ” என பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “அஜித்குமாரின் ரேஸிங் குழுவினர் அபாரமான சாதனையை நிகழ்த்தியுள்ளனர். எனது நண்பர் அஜித்குமார் தனக்கு பிடித்த விஷயங்களுக்கான எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டே செல்கிறார்.

இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு இது ஒரு முக்கியமான தருமணம் மட்டுமல்லாமல் பெருமைமிகு தருணம்” என பதிவிட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “24H துபாய் 2025, 991-வது பிரிவில் அஜித்குமார் மற்றும் அவரது குழுவினர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து மகிழ்ந்தேன்.

அஜித்குமார் மற்றும் அவரது குழுவினருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பெருமைமிகு இந்த ரேஸிங் நிகழ்வில் திராவிட மாடல் அரசின் லோகோவை வெளிப்படுத்தி காட்டியதற்கு நன்றி. நமது தேசத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் மென்மேலும் பெருமை சேர்க்க அஜித்குமாருக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.



Source link