Last Updated:
Avinash | கடந்த ஆண்டு தனது 13 வருட காதலியான தெரசா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவினாஷ் தான் தந்தையாக போகும் செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சீரியல் நடிகர் அவினாஷ் தான் தந்தையாக போகும் மகிழ்ச்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சன் டிவியில் ஒளிபரப்பான ‘தில்லானா தில்லானா’ நடன நிகழ்ச்சி மூலம் தனது கரியரை தொடங்கியவர் அவினாஷ். தொடர்ந்து ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியின் மூலம் கவனம் பெற்றார்.
நடன கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய அவினாஷ், ‘அழகு’ சீரியல் மூலம் நடிகராக அறிமுகமானார். அடுத்து ‘அம்மன்’, ‘சாக்லெட்’ தொடர்களில் நடித்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘வீட்டுக்கு வீடு வாசற்படி’ தொடரில் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு தனது 13 வருட காதலியான தெரசா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவினாஷ் தான் தந்தையாக போகும் செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
January 02, 2025 3:11 PM IST