அமரன் படத்தால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக இழப்பீடு கேட்டு தயாரிப்பாளர், இயக்குநருக்கு மாணவன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார் பெர்சனல் லோன் வேணுமா… கிரிடிட் கார்டு வேணுமா… முதியோர், அனாதை இல்லங்களுக்கு உதவ முடியுமா.. ஏ.சி., வாஷிங் மெஷினுக்கு ப்ரீ சர்வீஸ் செய்து தரோம்… எப்போதோ யாருக்கோ தெரிந்தோ தெரியாமலோ நாம் கொடுத்த போன் நம்பர்களால் பலவித தொந்தரவுகளை எதிர்கொள்கிறோம்.. ஆனால் இது எதுவும் இல்லாமல் பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் பெரும் சிக்கலை சந்தித்துள்ளார். அவருக்கு வந்த போன் கால் எல்லாமே சாய் பல்லவி இருக்காங்களா என்பதுதான்.

விளம்பரம்

மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையாக கொண்டு, சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியானது அமரன். படத்தில் கதாநாயகியான சாய் பல்லவி, தனது போன் நம்பரை ஒரு சிறிய துண்டு சீட்டில் எழுதி சிவகார்த்திகேயனிடம் கொடுப்பார். உண்மையிலே படத்தில் காட்டப்பட்ட போன் நம்பர், சென்னையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் வாகீசன் என்பவருடையது. தனது போன் நம்பர் வெள்ளித்திரையில் வெளியானது குறித்து அறியாத வாகீசன் தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடி கொண்டிருந்தார். அப்போதுதான் தொடர்ந்து ஒலிக்க தொடங்கியது அவரது போன்.

விளம்பரம்

சாய் பல்லவி கிட்ட பேசமுடியுமா என அழைத்தவர்கள் கூற அதிர்ந்து போனார். ஒரு கட்டத்தில் அழைப்புகள் அதிகரிக்கவே மியூட்டில் போட்டுள்ளார். தொடர்ந்து தொந்தரவுகள் எல்லைமீறி போக, படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, கதாநாயகன் சிவகார்த்திகேயனை சோஷியல் மீடியா மூலம் தொடர்பு கொண்டு நிவாரணம் கோரினார். அவர்களிடமிருந்து பதில் வராத நிலையில் அமரன் பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: 
விவாகரத்துக்கு பின் ஜிவி பிரகாஷுக்காக சைந்தவி வெளியிட்ட முதல் வீடியோ.. இணையத்தில் குவியும் பாராட்டு..!!

விளம்பரம்

அதில் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு கேட்டுள்ளார். ஆதார், வங்கி மற்றும் கல்வி நிறுவனங்களில் இதே போன் நம்பரை கொடுத்துள்ளதாகவும், அதனால் அந்த நம்பரை தன்னால் மாற்ற முடியாது என்றும் வாசீகன் தெரிவித்துள்ளார்.

.



Source link