தீபாவளி (31-10-2024) அன்று தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்த சிவகார்த்திகேயனின் ‘அமரன்’, ஜெயம் ரவியின் ‘பிரதர்’, கவின்-ன் ‘பிளடி பேக்கர்’, துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ என 4 படங்கள் திரைக்கு வந்தன. ஒரே நாளில் வெளியான இந்த 4 படங்களுக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது, வெளியான படங்களில் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. வீர மரணமடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் ‘அமரன்’. ‘ரங்கூன்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், முகுந்த் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்தனர்.

விளம்பரம்

ரிலீசுக்கு முன்பே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது. அதற்கு முக்கிய காரணம் காஷ்மீரில் தீவிரவாதிகளை வீழ்த்தி வீரமரணமடைந்து, உயரிய விருதான அசோக சக்ராவைப் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் கதை என்பதுதான். ‘அமரன்’ படப்பிடிப்பு மேஜர் முகுந்த் வரதராஜன் இருந்த காஷ்மீரின் 44 RRல் படமாக்கப்பட்டது. அணுகு ராணுவ வீரர்கள் தங்கும் இடம், அவர்கள் பயிற்சி மேற்கொள்ளும் இடம், என அவர்களின் அன்றாட வாழ்வியல் அங்கிருந்து படமாக்கப்பட்டது, இதனால் ‘அமரன்’ ரிலீஸில் தாமதம் ஏற்பட்டது.

விளம்பரம்

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தீபாவளி அன்று திரையரங்குகளில் ‘அமரன்’ வெளியானது. படம் வெளியான நாள் முதல் நல்ல வசூலைப் பெற்று, பார்வையாளர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ‘அமரன்’ படக் குழுவினருக்கு முதலமைச்சர் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரை பிரபலங்களும் பாராட்டு தெரிவித்தனர். ‘அமரன்’ படம் வெளியான 2 நாட்களில் ரூ. 40 கோடி வசூல் ஈட்டியது, தற்போது பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரூ. 300 கோடியை குவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிங்க: 
“ஷுட்டிங்கின்போது என்னிடம் அந்த நடிகர் தவறாக நடக்க முயன்றார்” – நடிகை குஷ்பு பகீர் குற்றச்சாட்டு!

இந்த நிலையில், ‘அமரன்’ படத்தின் மூலம் புதிய சாதனை படைத்து விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களையே பின்னுக்குத் தள்ளியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். ‘புக் மை ஷோ’-வில் ‘அமரன்’ படத்திற்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்துள்ளன. இதுவரை ‘Book My Show’ மூலம் 4.55 மில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. அதே சமயம், விஜயின் ‘தி கோஸ்ட்’ டிக்கெட்டுகள் 4.5 மில்லியனும், ரஜினியின் ‘வேட்டையன்’ டிக்கெட்டுகள் 2.7 மில்லியனும் விற்கப்பட்டுள்ளன. இதன் மூலம், அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்ட படமாக ‘அமரன்’ புதிய சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

.



Source link