Last Updated:

Most Expensive Passport | Compare The Market அறிக்கையின் படி, உலகிலேயே ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ல் மலிவான பாஸ்போர்ட் கிடைக்கிறது.

News18

உலகிலேயே மிக விலையுயர்ந்த பாஸ்போர்ட்டை கொண்ட நாடு எது? மற்றும் அதன் விலை என்ன? என்பதை இங்கே பார்க்கலாம்.

உலகின் மிக குறைந்த விலையுள்ள பாஸ்போர்ட்டுகளை Compare The Market தரவரிசைப்படுத்தி உள்ளது. பாஸ்போர்ட் என்பது உலகத்தை சுற்றி வர உதவும் மிக முக்கியமான பயண ஆவணமாகும். பெரும்பாலான அரசாங்கங்கள் பாஸ்போர்ட்டுகளை வழங்குகின்றன மற்றும் மக்கள் கட்டணம் செலுத்தி அதற்கு விண்ணப்பிக்கலாம். பொதுவாக, பாஸ்போர்ட்டின் விலை நீங்கள் வசிக்கும் இடத்தை பொறுத்தது. அத்துடன் நாடுகளுக்கு இடையே அதன் விலையில் மாற்றம் இருக்கும். Compare The Market அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டில் பாஸ்போர்ட் பெறுவதற்கான செலவு ரூ.19,000 முதல் ரூ.1,500 வரை உள்ளது.

மலிவான பாஸ்போர்ட் கிடைக்கும் நாடு

உலகிலேயே ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ல் மலிவான பாஸ்போர்ட் கிடைக்கும். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாஸ்போர்ட் பெறுவதற்கு ரூ.1,400 மட்டுமே செலவாகும். இது 10 வருடங்கள் செல்லுபடியாகும். அடுத்ததாக, இந்தியாவில் பாஸ்போர்ட்-ன் விலை ரூ.1,524.95 ஆகும். இது ஏப்ரல் 2024 நிலவரப்படி, உலகளவில் இரண்டாவது மலிவான பாஸ்போர்ட்டாக உள்ளது. கென்யா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற ஆப்பிரிக்க நாடுகளுடன், ஹங்கேரி மற்றும் ஸ்பெயின் போன்ற சில ஐரோப்பிய நாடுகளிலும் கூட உலகின் மிகக் குறைந்த விலையுள்ள பாஸ்போர்ட்கள் கிடைக்கின்றன.

Also Read: அதானியுடனான ரூ. 6,000 கோடி பிஸ்னஸ் ரத்து! கென்யா அதிரடி முடிவு!

இந்திய பாஸ்போர்ட் ஏன் சிறந்த மதிப்பை கொண்டுள்ளது

இந்த பட்டியலில், இந்திய பாஸ்போர்ட் ‘ஆண்டுக்கான செலவு’ (cost per year) அடிப்படையில் சிறந்த மதிப்பை கொண்டுள்ளது. அதே சமயம் 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்களுக்கான ஸ்பெயினின் பாஸ்போர்ட், விசா இல்லாத அணுகலுடன் 194 நாடுகளுக்கு செல்லும் வகையில், உலகின் மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களில் ஒன்றாக சிறந்த மதிப்பை வழங்குகிறது. ஹென்லி பவர்ஃபுல் பாஸ்போர்ட் இன்டெக்ஸ் 2024ல், இந்திய பாஸ்போர்ட் 82வது இடத்தை பெற்றுள்ளது. இதன் மூலம் விசா இல்லாமல் 58 நாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்பை இது வழங்குகிறது.

மிகவும் விலையுயர்ந்த பாஸ்போர்ட்

சுவாரஸ்யமாக, உலகின் மிக விலையுயர்ந்த பாஸ்போர்ட்களை மெக்சிகோ கொண்டுள்ளது. இந்த பாஸ்போர்ட் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும். இதன் விலை சுமார் ரூ.19,481.75 ஆகும். அதேபோல், அதன் ஆறு மற்றும் மூன்று ஆண்டு பாஸ்போர்ட்டுகள், நான்காவது மற்றும் ஒன்பதாவது மிகவும் விலை உயர்ந்ததாக மதிப்பிடப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் 10 ஆண்டுக்கான பாஸ்போர்ட் ரூ.19,041. அமெரிக்காவின் 10 ஆண்டுக்கான பாஸ்போர்ட் விலை ரூ.13,868 ஆகும்.

தமிழ் செய்திகள்/உலகம்/

அமெரிக்கா, இங்கிலாந்து அல்ல! உலகிலேயே மிக விலையுயர்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடு எது? அதன் விலை தெரியுமா?



Source link