Last Updated:
அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க 18 கோடிக்கும் அதிகமானோர் தகுதி பெற்றுள்ள நிலையில், தேர்தல் நாளுக்கு முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்தி தற்போது வரை நான்கரை கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர்.
உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அந்த நாட்டின் நேரப்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அமெரிக்க மாகாணங்களுக்கு இடையே நேர வித்தியாசம் உள்ள நிலையில், இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணி முதல் 7.30 மணிக்குள் ஒவ்வொரு மாகாணங்களாக வாக்குப்பதிவு தொடங்க உள்ளது.
இதையும் படிக்க: இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்… வெற்றியை முடிவு செய்யும் முக்கிய மாகாணங்கள்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க 18 கோடிக்கும் அதிகமானோர் தகுதி பெற்றுள்ள நிலையில், தேர்தல் நாளுக்கு முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்தி தற்போது வரை நான்கரை கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர். இந்திய நேரப்படி நாளை காலை 9.30 மணிக்குள் அனைத்து மாகாணங்களிலும் வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளது. ஒவ்வொரு மாகாணத்திலும் வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இறுதி கட்ட கருத்துக் கணிப்பில் டிரம்ப் முன்னிலை பெற்றிருக்கும் நிலையில், பெரும்பாலும் நாளை மாலைக்குள் புதிய அதிபர் யார் என்பது உறுதி செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இழுபறி நீடித்தால் ஓரிரு நாட்களுக்குப் பிறகே முடிவு தெரியவரும் என்று கூறப்படுகிறது. தேர்தல் முடிவுக்கு பிறகு டிசம்பர் 17 ஆம் தேதி எலக்டோரல் காலேஜ் முறைப்படி புதிய அதிபர் மற்றும் துணை அதிபர் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதைத்தொடர்ந்து அமெரிக்காவின் புதிய அதிபர் ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
November 05, 2024 10:27 AM IST
US Election : அமெரிக்க அதிபர் தேர்தல் தொடங்கும் நேரம் என்ன? முடிவுகள் எப்போது அறிவிக்ப்படும்?