Last Updated:

பாலிசேட்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பற்றிய எண்ணற்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

News18

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸை சுற்றியுள்ள காடுகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ ஆனது அதன் சுற்றுப்புறங்களான அல்டடேனா, பசடேனா மற்றும் பசிபிக் பாலிசேட்ஸ் வழியாக பரவி ஹாலிவுட் ஹில்ஸை அடைந்தது. அங்கு பல ஹாலிவுட் பிரபலங்கள் வீடுகள் உள்ளன. இதுவரை, 4,856 ஹெக்டேர் பரப்பளவு இந்த தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 1100 கட்டிடங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

அறிக்கையின்படி, காட்டுத் தீயில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கான வீடுகள் எரிந்து சாம்பலாகிவிட்டன, இதில் பல பிரபல பிரபலங்களின் வீடுகளும் அடங்கும். பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ரோஜர்ஸின் வரலாற்று சிறப்புமிக்க பண்ணை வீடு மற்றும் 1929 இல் செய்தித்தாள் வெளியீட்டாளர் வில்லியம் ராண்டால்ஃப் ஹியர்ஸ்ட்டால் கட்டப்பட்ட டோபாங்கா ராஞ்ச் மோட்டல் போன்ற பல வரலாற்று கட்டிடங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

பாலிசேட்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பற்றிய எண்ணற்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. நகரம் பைன் காடுகளால் சூழப்பட்டுள்ளது. காய்ந்த பைன் மரங்கள் எரிந்ததால் செவ்வாய்கிழமை தொடங்கிய தீ, சில மணி நேரங்களிலேயே பெரும் பகுதியை எரித்தது.

இந்நிலையில் காட்டுத் தீயில் சிக்கிய மான் குட்டி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. காட்டுத் தீ ஆனது வன விலங்குகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏனெனில் அவற்றின் வாழ்விடங்களில் அழிவு ஏற்படுவதால், பெரும் சிரமத்திற்கு ஆளாகிறது. சமீபத்தில் வைரலாகும் இந்த வீடியோவை பார்த்தால், வன விலங்குகள் எப்படி தீயில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள முயல்கின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். காட்டுத்தீயில் இருந்து தன்னை காப்பாத்திக் கொள்ள, அவை மனிதப் பகுதிகளை அடைகின்றன.

லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியான வீடியோ நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளது. காட்டுத்தீ 10,000 ஏக்கருக்கு மேல் எரிந்ததால் அல்டடேனா வழியாக ஒரு குட்டி மான் வெறித்தனமாக ஓடுவதைக் காணலாம். காட்டுத் தீயில் இருந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள குட்டி மான் ஒன்று, சாலையின் நடுவில் ஓடி, எங்கு செல்வது என்று தெரியமால் சுற்றி பார்க்கிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது X இல் @JWheelertv என்ற கணக்கில் இருந்து பகிரப்பட்டது. இந்த வீடியோ பகிரப்பட்டதை அடுத்து வைரலாகி 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பல நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதில் ஒரு யூசர், உதவியற்ற உணர்வு என்று கூறியுள்ளார். மற்றொரு யூசர், யாராவது அவர்களை காப்பாற்றுங்கள் என்று எழுதியுள்ளார். இன்னொரு யூசர், சொல்ல வார்த்தைகள் இல்லை, ஆனால் இதயம் வருந்துகிறது என்று கூறியுள்ளார்.





Source link