Last Updated:
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு துவங்கி நடைபெற்றுவருகிறது. இந்திய நேரப்படி எப்போது முடிவுகள் வெளியாகும்.
உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
அந்த நாட்டின் நேரப்படி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அமெரிக்க மாகாணங்களுக்கு இடையே நேர வித்தியாசம் உள்ள நிலையில், இந்திய நேரப்படி மாலை 4.30 மணி முதல் ஒவ்வொரு மாகாணங்களாக வாக்குப்பதிவு தொடங்கியது.
Also Read: US Election 2024 Result Live Updates
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் பாரம்பரியமாக நடைபெறும் நள்ளிரவு வாக்குப்பதிவு நியூ ஹாம்ப்ஷர் டிக்ஸ்வில்லி நாட்ச் பகுதியில் நடந்து முடிந்தது. இதில் ஆறு பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அதில், ஜனநாயக கட்சிக்கும், குடியரசு கட்சிக்கும் தலா மூன்று வாக்குகள் கிடைத்தன. இந்த சிறு நகரத்தில் வசிக்கும் ரயில்வே ஊழியர்களின் வசதிக்காக நள்ளிரவு நேரத்தில் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
இந்திய நேரப்படி புதன்கிழமை காலை 9.30 மணிக்குள் அனைத்து மாகாணங்களிலும் வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளது. ஒவ்வொரு மாகாணத்திலும் வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதையும் படியுங்கள் : டெல்லியை விட 6 மடங்கு காற்றுமாசு.. உலகின் மிகவும் மாசுபட்ட நகரம் எது தெரியுமா?
இந்நிலையில், அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்கள் ஜனநாயக கட்சி அல்லது குடியரசுக் கட்சி என இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்றுக்கு ஆதரவான நிலையிலேயே உள்ளன. எனவே, இழுபறி நிலவும் சில மாநிலங்களிலேயே கூடுதல் கவனம் உள்ளது.
இந்த மாகாணங்கள் “இழுபறி மாகாணங்கள்” என அழைக்கப்படுகின்றன. இவையே பெரும்பாலும் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. இந்த ஆண்டு அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் மற்றும் வட கரோலினா ஆகியவை இழுபறி மாகாணங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே இம்மாகாணங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது.
November 05, 2024 7:03 PM IST