இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு 4 ஸ்மார்ட்போனுக்கு அமேசானில் அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.
ஒன்பிளஸ் நார்டு 4 ஸ்மார்ட்போனின் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்ட், அமேசானில் ரூ.28,999 விலையில் கிடைக்கிறது. மேலும், ஐசிஐசிஐ கார்டை பயன்படுத்தி கூடுதல் தள்ளுபடியை பெறும்பட்சத்தில், இந்த ஸ்மார்ட்போனை ரூ.25,000க்கு குறைவான விலையில் வாங்க முடியும்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் நார்டு 4 ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியன்ட்டான 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் அறிமுகமான நேரத்தில் ரூ.29,999 விலையில் விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்பிளஸ் நார்டு 4 ஆனது, மெட்டல்-யூனிபாடி டிசைன், ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரல் 3 சிப்செட், ஒரு பிளாட் 120Hz அமோலெட் (AMOLED) டிஸ்ப்ளே, 5,500mAh பேட்டரி மற்றும் 6 ஆண்டுகள் வரையிலான சாஃப்ட்வேர் அப்டேட்டுகள் உள்ளிட்ட சில குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது.
அமேசானின் அதிரடி தள்ளுபடி
ஒன்பிளஸ் நார்டு 4 ஸ்மார்ட்போனின் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்ட் அமேசானில் ரூ.28,999 விலையில் கிடைக்கிறது. இந்த மாடல் முன்னதாக ரூ.32,999 விலையில் விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அமேசான் ரூ.4,000 தள்ளுபடியுடன் விற்பனை செய்கிறது. அதே நேரத்தில், அதன் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட் அதன் ஒரிஜினல் விலையான ரூ.35,999-லிருந்து ரூ.4,000 தள்ளுபடியுடன் ரூ.31,999 விலைக்கு விற்கப்படுகிறது.
மேலும், நீங்கள் ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டை (அமேசான் ஃபே கிரெடிட் கார்டை தவிர) வைத்திருக்கும் பட்சத்தில், கூடுதலாக ரூ.4,000 உடனடி வங்கி தள்ளுபடியையும் பெறலாம். இதன் மூலம், ஒன்பிளஸ் நார்டு 4இன் 8GB RAM வேரியன்ட்டை ரூ.24,999 விலைக்கும், 12GB RAM வேரியன்ட்டை ரூ.27,999 விலைக்கும் வாங்க முடியும்.
அதே நேரத்தில், நீங்கள் ஆர்பிஎல் வங்கியின் கிரெடிட் கார்டை வைத்திருந்தால், ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.4,000 உடனடி தள்ளுபடியுடன் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.
ஒன்பிளஸ் நார்டு 4 சிறப்பம்சங்கள்
ஒன்பிளஸ் நார்டு 4-ஐ பொறுத்த வரையில், அதன் செயல்திறன் மற்றும் தனித்துவமான வடிவமைப்பு அதனை மற்ற மாடல்களில் இருந்து தனித்து நிற்க வைக்கிறது. ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 3 பிராசசரால் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன், வழக்கமான தொடர் பயன்பாட்டுக்கும், கேமிங் யூசர்களுக்கும் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது.
இதையும் படிக்க: பிளிப்கார்ட் சூப்பர் காய்ன் மூலம் இலவச ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் பெறுவது எப்படி…? எளிமையான 5 படிகள்…!
இதன் துடிப்பான 6.74-இன்ச் பிளாட் அமோலெட் (AMOLED) டிஸ்ப்ளே சிறந்த டிஸ்ப்ளே அனுபவத்தை வழங்கும் அதே வேளையில், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மென்மையான அனுபவத்தைக் கொடுக்கிறது மற்றும் அனிமேஷன் காட்சிகளில் ஒரு சிறப்பான உணர்வை தருகிறது. மேலும், இதில் இடம்பெற்றிருக்கும் 5,500mAh பேட்டரி நீடித்த ஆயுளை வழங்குகிறது மற்றும் 100W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங், சுமார் 30 நிமிடங்களில் ஸ்மார்ட்போனை பூஜ்ஜியத்தில் இருந்து முழுவதுமாக சார்ஜ் செய்கிறது.
முக்கிய அம்சங்களைத் தாண்டி, ஒன்பிளஸ் நார்டு 4 அதன் பிரீமியமான தரம் மற்றும் வடிவத்தால் அனைவரையும் ஈர்க்கிறது. சந்தையில் உள்ள மற்ற ஸ்மார்ட்போன்களைப் போல் இல்லாமல், மெட்டல்-யூனிபாடி டிசைன் கொண்ட நார்டு 4, ஒரு பிரீமியம் உணர்வைத் தருகிறது. மேலும், தற்போதைய காலக்கட்டத்தில் மெட்டல் யூனிபாடி டிசைனைக் கொண்ட ஒரே ஸ்மார்ட்போன், நார்டு 4 என்பதும் குறிப்பிடத்தக்கது.
கூடுதலாக, ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஆக்ஸிஜன் ஓஎஸ் சாப்ட்வேரையும் மேம்படுத்தியுள்ளது. இது குறைந்தபட்ச ப்ளோட்வேருடன் எளிமையான அனுபவத்தை வழங்குகிறது. 6 ஆண்டு செக்யூரிட்டி பேட்ச் அப்டேட்டும், 4 ஆண்டு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்டும் இந்த மாடலுக்கு வழங்கப்படுகிறது.
இதையும் படிக்க: ரூ.25,000க்கு கீழ் தற்போது கிடைக்கும் OnePlus 13R…! சலுகையை எவ்வாறு பெறுவது…?
எனவே, உயர்மட்ட செயல்திறனுடன், தனித்துவமான தோற்றம் மற்றும் அதிரடி தள்ளுபடியுடன் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை வாங்க விரும்புபவர்களுக்கு நார்டு 4 ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
January 22, 2025 6:59 PM IST