அரசினால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை கைவிடும் திட்டம் இல்லை என சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் குறைக்கப்படும் என வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

அத்துடன், அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சமூக வலுவூட்டல் திட்டங்களுக்குப் பிராந்திய செயலக மட்டத்தில் தகவல்கள் புதுப்பிக்கப்படும் என சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Source link