எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு வழங்கப்படும் என தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (09) கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
“25,000 ரூபாய் என்றி இல்லை, நாங்கள் இலக்கத்தினை பார்க்க மாட்டோம். யாரும் இதற்கு பதறத் தேவையும் இல்லை.
இந்த நாட்டில் உள்ள அரச ஊழியர்களின் வாக்குகளை இலக்காகக் கொண்டு செப்டெம்பர் 4 ஆம் திகதி தபால் மூல வாக்கெடுப்புக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை தீர்மானம் ஒன்றை எடுத்தார்.
ஆனால் அரசு ஊழியர்கள் நல்ல பதில் அளித்தனர். இது பொது ஊழியர்களை ஏமாற்றுவதற்காக முன்வைக்கப்பட்ட ஒன்று, உண்மை அல்ல.”
The post அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதில் IMF ஆட்சேபனைகள் இல்லை appeared first on Daily Ceylon.