அரச அதிகாரிகளாக இருப்பவர்கள் எம்மை விட கல்வித் தரத்திலே உயர்ந்தவர்களாகவும் இருப்பார்கள் எனவும் அவர்களுடன் அணுகுவதற்கான முறையுள்ளதாகவும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் கடந்த 13 ஆம் திகதி அமைச்சர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற முதலாவது அபிவிருத்தி குழுக் கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் செயற்பாடு தொடர்பாக நேற்று முன்தினம் (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சிறீதரன் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, “அரசு அதிகாரிகளாக இருப்பவர்கள் எங்களை விட கல்வித்தரத்திலே உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அறிவுபூர்வமாக கற்றுதேர்ந்ததன் பின்னரே அவர்கள் அந்த பதவிகளுக்கு வந்துள்ளார்கள்.
ஊடகவியலாளர்களுக்கும் எங்களை விட ஊடகத்துறையில் அனுபவம் கூடுதலாகவே இருக்கும். எனவே, என்னை பொறுத்த வரைக்கும் நாம் அவர்களை அணுகுவதற்கான முறையொன்று உள்ளது.
மனிதாபிமானத்தையும் மனித மூலதனத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பாக நாம் மிகவும் கண்ணியத்தோடும் பொறுப்போடும் நடக்க வேண்டும்.
எங்களுடைய கட்சி இதுவரைக் காலமும் அவ்வாறு தான் நடந்திருக்கிறது. தொடர்ந்தும் அந்த பொறுப்போடும் கண்ணியத்தோடும் அரச உத்தியோத்தர்களோடு அணுகி செயற்படுவோம்” என அவர் தெரிவித்தார்.
The post அரச அதிகாரிகளுடன் அணுக முறையுள்ளது appeared first on Thinakaran.