அரச இலக்கிய விருது விழா (2024) இன்று (27) புதன்கிழமை அலரி மாளிகையில் நடைபெறுகிறது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் பிற்பகல் இரண்டு மணிக்கு இவ்விழா நடைபெறும்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி ஏற்பாட்டில் இடம்பெறும் இவ்விலக்கிய விழாவில், நாட்டின் இலக்கியத் துறைக்கு உன்னத பங்களித்த படைப்பாளிகள் விருது வழங்கி கௌரவிக்கப்படுவர்.
அரச இலக்கிய ஆலோசனைக் குழு தலைவர், சங்கைக்குரிய ரம்புகன சித்தார்த்த ஹிமி, கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் யசிந்தா குணவர்தன, இலங்கை கலைக் கழக தலைவர் பேராசிரியர் பிரணீத் அபேசுந்தர மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள், அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பீ.எம்.பி. அத்தபத்து ஆகியோர் இவ்விழா சிறப்புற நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்துள்ளனர்.
The post அரச இலக்கிய விருது விழா ஜனாதிபதி தலைமையில் இன்று அலரிமாளிகையில் appeared first on Thinakaran.