இதுவரை 22,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த அரிசி விநியோகம் தற்போது நடைபெற்று வருவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் இதனைத் தெரிவித்தார். மேலும் 10,000 மெற்றிக் தொன் அரிசி இன்று பெற்றுக்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சந்தையின் தேவைகளை கருத்தில் கொண்டு அரிசி இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான திகதிகளை நீடிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.



Source link