சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, கருணாஸ், பாபி தியோல், யோகி பாபு, திஷா பதானி உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான படம் “கங்குவா”. வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் (14ம் தேதி) உலகெங்கிலும் 10,000 திரையரங்குகளில் 8 மொழிகளில் வெளியானது. மேலும், “கங்குவா” படம் முன்பதிவில் ரூ. 4 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டி மிரளவைத்தது. பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட இசை வெளியீட்டு விழா, ப்ரோமோஷன் பணிகள், படத்தின் ட்ரைலர் என அனைத்தும் மக்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கிளறியது. மேலும் “பாகுபலி”, “RRR” போன்று மிக பெரிய பான் இந்தியா ஹிட் படமாக ‘கங்குவா’ உருவெடுக்கும் என்றும், பாக்ஸ் ஆபிசில் ரூ. 2,000 கோடி வசூல் சாதனை படைக்கும் என்று உறுதியாகவும் கூறப்பட்டது.

விளம்பரம்

படம் திரையரங்குகளில் வெளியானதும் ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் படத்தை பார்த்துவிட்டு தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். இதில், பாசிட்டிவ் கருத்துகளும், நெகட்டிவ் கருத்துகளும் இருந்தன. ஆனால், பெரும்பான்மையான ரசிகர்களும், மக்களும், “படம் முழுக்க அதிக சத்தம் இருக்கிறது. இதனால், ஒருவகையான எரிச்சலும், தலைவலியும் வருகிறது” என விமர்சித்திருந்தனர். மேலும் எதிர்பார்த்த அளவு “கங்குவா” இல்லை என்றும் பலவிதமான நெகட்டிவ் கமெண்ட்ஸ் மற்றும் மீம்கள் இணையத்தில் குவிந்து வருகிறது. மிகவும் பிரம்மாண்ட பொருட்செலவில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு எடுக்கப்பட்ட “கங்குவா” படத்திற்கு இப்படியான விமர்சனங்கள் வருவது படக்குழுவை பாதித்துள்ளது. பலவிதமாக வலம் வரும் நெகட்டிவ் கமெண்ட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விளம்பரம்

அதில், “இந்த குறிப்பை நான் ஜோதிகாவாகவும், சினிமா ரசிகையாகவும் எழுதுகிறேன், நடிகர் சூர்யாவின் மனைவியாக அல்ல. கங்குவா – சினிமாவில் ஒரு மிரளவைக்கும் படைப்பு. நடிகராகவும், சினிமாவை முன்னோக்கி எடுத்து செல்ல நீங்கள் எடுக்கும் துணிகரமான செயல்களையும் நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. நிச்சயமாக முதல் 1/2 மணிநேரம் மிகுந்த சத்தத்தால் அந்த காட்சிகள் ஒர்க்அவுட் ஆகவில்லைதான், பெரும்பாலான இந்தியப் படங்களில் குறைபாடுகள் ஒரு பகுதியாகும், எனவே இது மிகவும் நியாயமானது, குறிப்பாக இதுபோன்ற ஒரு பெரிய படத்தின் சில தவறுகள் மூலம் நிறைய கற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் 3 மணி நேர முழு படத்தின் முதல் 1/2 மணி நேரம்தான் இந்த பிரச்னை இருந்தது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கங்குவா ஒரு முழுமையான சினிமா அனுபவம்! தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திடாத அளவுக்கு கேமரா மூலம் மாயாஜாலம் காட்டியுள்ளனர்.

விளம்பரம்
விளம்பரம்

ஊடகங்கள் மற்றும் சிலர் படம்குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, ஏனென்றால் நான் முன்பு பார்த்த மிக பெரிய பட்ஜெட் படங்களில், பெண்களை பின்தொடர்வது, இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது, உச்சகட்ட ஆக்ஷன் காட்சிகள் கொண்ட படங்களுக்கு இந்த அளவுக்கு நெகடிவ்வான விமர்சனங்களை நான் பார்த்ததில்லை. கங்குவாவின் பாசிட்டிவான விஷயங்கள் பற்றி ஏன் யாரும் பேசவில்லை? 2ம் பாதியில் பெண்களின் ஆக்‌ஷன் காட்சியும், கங்குவாவுக்காக சிறுவனின் காதலும் துரோகமும்? விமர்சிக்கும் போது பலரும் அதன் பாசிட்டிவ் பக்கத்தை மறந்துவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். அவ்வாறானதை ஒருவர் படிக்க வேண்டுமா, கேட்க வேண்டுமா அல்லது நம்பத்தான் வேண்டுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது.

விளம்பரம்

News18

3டியை உருவாக்க குழு எடுத்த முயற்சிக்கு கைதட்டல் கிடைக்க வேண்டிய நிலையில், முதல் ஷோ முடிவதற்கு முன்பே முதல் நாள் கங்குவாவுக்கு இவ்வளவு எதிர்மறையான நெகட்டிவ் விமர்சனங்கள் வருவது வருத்தமளிக்கிறது. கங்குவா டீம்.. நீங்கள் பெருமிதத்துடன் இருங்கள், எதிர்மறையான நெகட்டிவ் விமர்சங்களை தெரிவிப்பவர்கள், சினிமாவை உயர்த்துவதற்கு வேறு ஒன்றும் செய்யவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என நடிகை ஜோதிகா காட்டமாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

.





Source link