ஆஸ்திரேலியா பவுலரான டென்னிஸ் லில்லி ஒருமுறை அலுமினியம் பேட் வைத்து விளையாடி சர்ச்சையான கதை உங்களுக்குத் தெரியுமா?

கடந்த 1979ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது பேட்டிங் செய்ய வந்த பவுலர் டென்னிஸ் லில்லி, அலுமினியம் பேட் கொண்டு வந்தார்.

அன்றைய காலக்கட்டத்தில் இப்படித்தான் பேட் இருக்க வேண்டும் என எந்த விதியும் இல்லை. அதனால் யாரும் அவரைக் கேள்வியும் கேட்க முடியவில்லை. அந்தப் பேட்டை வைத்தே அவர் ஒரு ஓவர் விளையாடினார். ஆனால் ஏதோ தவறாக இருக்கிறதே என்று எண்ணிய அன்றைய இங்கிலாந்து கேப்டன் மைக் பிரேர்லி, அப்போதுதான் டென்னிஸ் லில்லியின் பேட்டைப் பார்த்தார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் கேப்டன்ஷிப் மாற்றம்? கவுதம் காம்பீர் தகவல்

ஒரு ஓவர் முடிந்த பிறகு, பந்தின் தோற்றம் மாறியுள்ளதை மைக் பிரேர்லி உணர்ந்தார். பிறகு அம்பயரிடம் சென்று, டென்னிஸ் லில்லி அந்தப் பேட்டை மாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார். இதனால் போட்டி 10 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. ஆனால் பேட் குறித்து எந்த விதியும் இல்லாததால், டென்னிஸ் லில்லியிடம் எதையும் கூற முடியவில்லை.

சிறிது நேரத்திற்குப் பிறகு, ஆஸ்திரேலியா கேப்டன் கிரெக் சேப்பல் டென்னிஸ் லில்லியிடம் பேட்டை மாற்றச் சொன்னார். இதனால் கடுப்பான டென்னிஸ் லில்லி தனது அலுமினியம் பேட்டை பெவிலியனை நோக்கித் தூக்கி எறிந்தார். பிறகு மரத்திலான பேட்டை வைத்து விளையாடத் தொடங்கினார்.

விளம்பரம்
வெறும் வயிற்றில் உலர் திராட்சை நீரை குடிப்பதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்.!


வெறும் வயிற்றில் உலர் திராட்சை நீரை குடிப்பதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்.!

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. டென்னிஸ் லில்லி எடுத்து வந்த அலுமினியம் பேட் அவரது நண்பர் கிரஹாம் மோனகனின் நிறுவனத்தினுடையது என்று கூறப்படுகிறது. அவரும் ஒரு கிரிக்கெட்டர் தான் என்பதும் டென்னிஸ் லில்லி அந்த நிறுவனத்தின் பாட்னர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சர்ச்சைக்குப் பிறகுதான் ஒரு கிரிக்கெட் பேட் இப்படித்தான் இருக்க வேண்டும் என விதிகள் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்தச் சம்பவம் குறித்து ‘மேநிஸ்’ என்ற தனது சுயசரிதையில் எழுதிய டென்னிஸ் லில்லி, அது விளம்பரத்திற்காக செய்த செயல் தான் என்று குறிப்பிட்டார். மேலும் அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அந்த நிறுவனத்தின் அலுமினியம் பேட் அதிகமாக விற்பனையானது என்றும் நினைவுகூர்ந்துள்ளார்.

விளம்பரம்

.



Source link