Last Updated:
நடிகர் அல்லு அர்ஜூன் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னணியில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இருக்கலாம் என்ற தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜூன் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னணியில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இருக்கலாம் என்ற தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் கடந்த நான்காம் தேதி திரையிடப்பட்ட புஷ்பா- 2 திரைப்படத்தை பார்க்க அல்லு அர்ஜூன் வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்மணி ஒருவர் உயிரிழந்தார். இதற்கு நீதி கேட்டு உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் அமைப்பினர் நேற்று அல்லு அர்ஜூன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவரது வீட்டில் இருந்த பூந்தொட்டிகளை சேதப்படுத்தியதோடு கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
மேலும் தெரிந்துகொள்க: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்.. தீவிரமடையும் ரசிகை மரண விவகாரம்
இந்த சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு ஐதராபாத் நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் அல்லு அர்ஜூன் வீட்டில் தாக்குதல் நடத்திய வழக்கில் கைதானவர்களில் ஸ்ரீநிவாஸ் ரெட்டி, பிரேம் குமார், பிரவீன் குமார், நாகராஜ் ஆகியோர் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில், ஸ்ரீநிவாஸ் ரெட்டி முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் சொந்த தொகுதியான கொடங்கல் தொகுதியின் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியாக இருப்பதும், அவரது தலைமையில் அல்லு அர்ஜூன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.
December 23, 2024 6:54 PM IST