நியூசிலாந்து உடனான 2ஆவது டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலியின் விக்கெட் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்த நிலையில், 2ஆவது போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 259 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கெட்டுகளை வரிசையாகப் பறிகொடுத்தனர்.

விளம்பரம்

இதையும் படிக்க:
சிக்கந்தர் ராசாவின் வெறியாட்டம்… டி20 கிரிக்கெட்டில் 344 ரன்கள்.. ஜிம்பாப்வே வரலாற்று சாதனை!

விராட் கோலி அணியை மீட்பார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், மிட்செல் சாண்ட்னர் பந்துவீச்சில், ஃபுல் டாஸ் பந்தில் 1 ரன்னில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். இந்தப் பந்தையடுத்து, மைதானத்திலேயே தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வெளியேறினார்.

சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி பெற சிறந்த நேரம் எப்போது.?


சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி பெற சிறந்த நேரம் எப்போது.?

இவரின் விக்கெட் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், “விராட் கோலி தனது வாழ்க்கையில் விளையாடி அவுட் ஆன மோசமான ஷாட் இதுதான் என்று அவருக்கே தெரியும். அவரை நினைத்து வருத்தப்படுகிறேன். ஏனென்றால் அவர் எப்போதும் நன்றாக விளையாட வேண்டும் என்ற உண்மையான எண்ணத்துடன் வருவார்” எனத் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் நாள் உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 107 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

.



Source link