Last Updated:

ஜாம்நகர் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நாளில், எனது தாத்தாவின் ஆத்மாவை நான் நினைவு கூறுகிறேன் என இஷா அம்பானி பேச்சு.

இஷா அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இயக்குனர் இஷா அம்பானி, ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்தின் 25வது ஆண்டு விழாவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே உரையாற்றி உணர்ச்சிப்பூர்வமான உரை நிகழ்த்தினார். உலகின் மிகப்பெரிய மற்றும் சிக்கலான சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையத்தின் பயணத்தை நினைவுகூறும் வகையில் இந்த விழா சிறப்பாக நடைபெற்றது.

திருபாய் அம்பானியின் கனவு:

ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானி கண்ட கனவாக ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம் உருவானதை இஷா அம்பானி நினைவு கூர்ந்தார். இந்த கனவை நனவாக்குவதில் முகேஷ் அம்பானியின் அயராத முயற்சி முக்கியமானது என்று அவர் பாராட்டினார்.

தாத்தாவின் ஆத்மாவை நினைவு கூறுகிறேன்:

“ஜாம்நகர் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நாளில், எனது தாத்தாவின் ஆத்மாவை நான் நினைவு கூறுகிறேன். இந்த சுத்திகரிப்பு நிலையம் அவருக்கு மிகவும் சிறப்பான கனவு, அவரது இதயத்தின் ஆழத்தில் இருந்த ஒரு தொலைநோக்கு பார்வை,” என்று இஷா அம்பானி உணர்ச்சிப்பூர்வமாக கூறினார்.

இதையும் படிக்க: FD திட்டங்களுக்கான RBI-இன் புதிய விதிமுறைகள்.. என்னென்ன தெரியுமா?

தனது தந்தை முகேஷ் அம்பானியைப் புகழ்ந்து, “எனது தாத்தாவின் கனவை நனவாக்குவதில் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். எனது தந்தை ஒரு தொலைநோக்கு பார்வையாளர், விடாமுயற்சி கொண்ட தலைவர். அவருக்கு ரிலையன்ஸை விட பெரிய எண்ணமும் இல்லை, அவரது தந்தையின் கனவுகளை விட உயர்ந்ததும் இல்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஜாம்நகர் – ஒரு சொர்க்கம்:

“ஜாம்நகர் ஒரு சொர்க்கம். எனது தாய் நீடா அம்பானி பாலைவன நிலத்தை பசுமையாக்கும் முயற்சியை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன்,” என்று இஷா கூறினார். 1999 இல் தொடங்கப்பட்ட ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம், இந்திய தொழில்துறை வெற்றி மற்றும் புதுமைகளின் அடையாளமாக திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார். இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பங்களித்துள்ளது என்பதை அவர் நினைவு கூர்ந்தார். இந்த 25 ஆண்டுகால பயணம் இந்திய தொழில்துறை திறனை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த சந்தர்ப்பம் என்று இஷா கூறினார்.

தமிழ் செய்திகள்/வணிகம்/

Isha Ambani: “அவருக்கு தன் தந்தையின் கனவுகளை விட உயர்ந்தது ஏதும் இல்லை…” – உணர்ச்சிப்பூர்வமாக பேசிய இஷா அம்பானி



Source link