சாம்பியன்ஸ் கோப்பைக்கான தொடரில் இந்தியா விளையாட மறுப்பதற்கான காரணத்தை தெரிவித்தால், அது சரி செய்யப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.

2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என பிசிசிஐ அறிவித்திருந்தது. மேலும் இந்திய அணி விளையாடும் போட்டிகளை 3ஆவது நாட்டிற்கு மாற்றுமாறும் ஐசிசிக்கு கோரிக்கை வைத்தது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி, “இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தானுக்கு வருவதில் ஏதெனினும் சிக்கல் இருந்தால் அதை பிசிசிஐ எங்களிடம் தெரிவிக்க வேண்டும். அதற்கு நாங்கள் தீர்வு காண்போம்” என தெரிவித்தார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த 5 வீரர்கள்.. யார் தெரியுமா?

தொடர்ந்து பேசிய அவர், “3ஆவது நாட்டில் போட்டிகளை நடத்தலாமா என்ற கேள்வியே வேண்டாம். பாகிஸ்தானின் பெருமையும், அதற்கான மரியாதையுமே எங்களுக்கு முக்கியம். சாம்பியன்ஸ் கோப்பை தொடர் எங்கள் நாட்டில் தான் நடக்கும். ஐசிசி இதற்கான தேதிகளை விரைவில் அறிவிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

காலை எழுந்தவுடன் டீ குடிப்பதால் ஏற்படும் 6 பக்க விளைவுகள்.!


காலை எழுந்தவுடன் டீ குடிப்பதால் ஏற்படும் 6 பக்க விளைவுகள்.!

“இந்திய அணியின் முடிவு குறித்து நாங்கள் ஐசிசி-யிடம் பேசி வருகிறோம்” என தெரிவித்த அவர், ஐசிசி தலைவராக ஜெய் ஷா பதவியேற்ற பின் ஐசிசி-யின் முடிவில் ஏதெனினும் தாக்கம் இருக்குமா என்ற கேள்விக்கு, “ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் தனித்து இயங்கக்கூடியது. இந்த விவகாரத்தில் ஐசிசி தனது நம்பகத்தன்மையை இழக்கக்கூடாது. ஐசிசி என்பது அனைத்து கிரிக்கெட் வாரியத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவது” என்று கூறினார்.

விளம்பரம்

மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு, இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.



Source link