Last Updated:

Sivakarthikeyan | அதிதி இதுபோன்ற நல்ல கதாபாத்திரம் இருக்கும் கதைகளில் நடிக்க வேண்டும். சரத்குமாரிடம் சூப்பரான ஒரு எனர்ஜி இருக்கிறது. அவருடன் சேர்ந்து சீக்கிரம் ஒரு படம் நடிக்க வேண்டும். யுவன் சார் GOAT. சின்ன படம், புது ஹீரோ, இயக்குநர் என்று எதுவும் பார்க்காமல் அவருடைய கரியர் முழுவதுமே நல்ல இசையைக் கொடுத்துள்ளார்.

News18

“எனக்கும் ஒரு நல்ல மாமனார் கிடைத்திருக்கிறார். எனக்கெல்லாம் யாரும் பெண் கொடுக்கவே மாட்டார்கள். ஏனெனில் நான் திருமணம் செய்த போது எனக்கு நல்ல வேலை இல்லை. விஜய் டிவியில் ஒரு ஷோ நடத்தினால் ரூ.4000 கொடுப்பார்கள் அதை வைத்து தான் குடும்பத்தை நடத்த வேண்டும். என்னுடைய மாமனார் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்” என நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கமாக பேசியுள்ளார்.

இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வா தம்பி ஆகாஷ், அதிதி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் ஜனவரி 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம் நான் கலந்து கொள்கிற முதல் நிகழ்ச்சி இது. இந்த நிகழ்வுக்கு நான் வர முக்கிய காரணம் சிநேகா பிரிட்டோ மற்றும் விஷ்ணுவர்தன் தான். பிரிட்டோ மிக நல்ல மனிதர். நம் எல்லோர் வாழ்விலும் மாமனார் மிகவும் ஸ்பெஷலான ஒரு உறவு. அது ஆகாஷுக்கு ஸ்பெஷலாக அமைந்திருக்கிறது.

எனக்கு ஆகாஷுக்கு கிடைத்தது போல ஒரு நல்ல மாமனார் கிடைத்திருக்கிறார். எனக்கெல்லாம் யாரும் பெண் கொடுக்கவே மாட்டார்கள். ஏனெனில் நான் திருமணம் செய்த போது எனக்கு நல்ல வேலை இல்லை. விஜய் டிவியில் ஒரு ஷோ நடத்தினால் 4000 கொடுப்பார்கள் அதை வைத்து தான் குடும்பத்தை நடத்த வேண்டும். என்னுடைய மாமனார் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். எனக்கு தாய் மாமா ஆக அவர் இருந்தாலும் அவர் நீ சரியான வேலையை செய் என்று சொன்னது கிடையாது.

இதையும் வாசிக்க: OTT Review | ஈகோவும்…ஈரக்கமில்லாத க்ரைமும்! – மிஸ்பண்ணக்கூடாத மலையாள த்ரில்லர்

அது மட்டும் இல்லாமல் என்னுடைய கனவை அடையவும் மனோகர் மாமா ஆதரவு கொடுத்தார். அப்படியான ஒரு மாமனார் ஆகாஷூக்கு கிடைத்திருக்கிறது. யுவன் இசையில் பாடல்கள் அருமையாக வந்திருக்கிறது. விஷ்ணு இயக்கியிருக்கிறார் என்பதற்காகவே அவருடைய படங்களைத் தியேட்டரில் பார்த்திருக்கிறேன். ஆகாஷூக்கு முதல் படமே பொங்கல் ரிலீஸாக அமைந்திருக்கிறது. எல்லாமே சரியாக இருப்பதால் முதல் பாலிலேயே சிக்ஸர் அடித்து விடுங்கள்.

அதிதி இதுபோன்ற நல்ல கதாபாத்திரம் இருக்கும் கதைகளில் நடிக்க வேண்டும். சரத்குமாரிடம் சூப்பரான ஒரு எனர்ஜி இருக்கிறது. அவருடன் சேர்ந்து சீக்கிரம் ஒரு படம் நடிக்க வேண்டும். யுவன் GOAT. சின்ன படம், புது ஹீரோ, இயக்குநர் என்று எதுவும் பார்க்காமல் அவருடைய கரியர் முழுவதுமே நல்ல இசையைக் கொடுத்துள்ளார்.

யுவன்- முத்துக்குமார் காம்பினேஷனை நான் இப்போதும் மிஸ் செய்கிறேன். இன்னும் நிறைய நல்ல பாடல்கள் நீங்கள் கொடுக்க வேண்டும். ஜனவரி 14 பொங்கல் அன்று தியேட்டரில் இந்தப் படம் பாருங்கள். எல்லாப் படங்களும் வெற்றி பெற எனது வாழ்த்துகள்” என்றார்.



Source link