Last Updated:

மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், பும்ரா அதில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த தொடரில் மட்டும் அவர் 30 விக்கெட்டுகளை கைப்பற்றி டெஸ்டில் நம்பர் ஒன் பவுலர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

News18

டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பவுலருக்கான தரவரிசையில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். இன்று வெளியிடப்பட்ட ஐசிசி தரவரிசையில் அஸ்வினின் சாதனையை முறியடித்து புதிய ரிக்கார்டை ஏற்படுத்தியிருக்கிறார் பும்ரா.

உள்ளூரில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் தொடரை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் காணப்பட்டன. இருப்பினும் அடுத்து நடந்த 3 போட்டிகளில் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது.

பேட்டிங்கில் நிதிஷ் குமார் ரெட்டி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மட்டுமே ஆறுதல் அளிக்கின்றனர். இந்திய அணியின் மற்ற வீரர்களை விடவும் ஜஸ்பிரித் பும்ரா வழக்கம்போல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், பும்ரா அதில்  9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த தொடரில் மட்டும் அவர் 30 விக்கெட்டுகளை கைப்பற்றி டெஸ்டில் நம்பர் ஒன் பவுலர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

இதையும் படிங்க – மெல்போர்ன் டெஸ்ட் தோல்வி… டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா பங்கேற்கும் வாய்ப்பு குறைந்தது…

இந்நிலையில் இன்று வெளியிடப்பட்ட ஐசிசி தரவரிசையில் பும்ராவுக்கு புள்ளிகள் உயர்ந்தன. மொத்தம் 907 புள்ளிகள் பெற்றுள்ள பும்ரா முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். இந்த புள்ளிகள் எந்தவொரு இந்திய வீரரும் எட்டாத உயரமாகும்

முன்னதாக அஸ்வின் 2016 டிசம்பரில் 904 புள்ளிகள் பெற்றிருந்தார். இதுவே அதிகபட்சமாக இருந்த நிலையில், அந்த சாதனையை முறியடித்துள்ளார் ஜஸ்பிரித் பும்ரா.



Source link