அஸ்வெசும நிவாரண உதவிகளை மீளாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி மற்றும் கொள்வனவு பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தகுதியுடையவர்களை உள்வாங்குவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“அஸ்வெசும செயல்முறையை மதிப்பாய்வு செய்து, அஸ்வெசும பெறுவதற்காக தகுதிபெற்று ஆனால் நிவாரணங்கள் எதுவும் கிடைக்காது இருப்பவர்கள் குறித்து தற்போது தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது. ஏராளமானோர் மேல்முறையீடு செய்தனர். அவை முறையான முறையில் மீண்டும் ஒருமுறை மதிப்பாய்வு செய்யப்பட்டு 2024 ஆம் ஆண்டிற்கான தொகையை விட 2025 ஆம் ஆண்டில் வழங்க எதிர்பார்த்துள்ளோம்..”