புகையிரத ஆசன முன்பதிவின் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணைக் குறிப்பிட வேண்டும் என்று புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, புகையிரத நிலையத்திற்குள் நுழையும் போதும், புகையிரதத்தில் பயணச்சீட்டு பரிசோதனை செய்யும் போதும், பயணச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணை சரிபார்த்து உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அதன்படி, 2025.01.01 ஆம் திகதி முதல், முன்பதிவு செய்யப்பட்ட ஆசன பயணச் சீட்டுக்கான பணத்தை மீளளிப்பு செய்யக் கோரும் போது, பயணச் சீட்டில் குறிப்பிடப்பட்ட தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணை உறுதி செய்ய, பயணியால் தொடர்புடைய தேசிய அடையாள அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டின் பிரதியானது புகையிரத நிலையத்திற்கு சமர்ப்பிக்கப்படுவது கட்டயமானது என்றும் இவ் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 



Source link