இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆடம்பர வீடுகள், கார்கள், ஸ்டுடியோக்கள் மற்றும் அவரது நிகர மதிப்பு குறித்து இங்கே பார்ப்போம்.

எளிமையான தொடக்கம் முதல் உலகின் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்தது வரையிலான ஏ.ஆர்.ரஹ்மானின் கதை அவரது மில்லியன் கணக்கான ரசிகர்களை ஊக்குவிக்கிறது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, ஆஸ்கார் விருது பெற்றது முதல், உலகளாவிய இசை துறையில் ஒரு முத்திரையை உருவாக்கியது வரை மட்டுமல்லாமல். அவர் கணிசமான செல்வத்தையும் குவித்துள்ளார். இசைப்புயல் என பெயர் பெற்ற ரஹ்மான், தனது இசை மூலம் ஒரு பேரரசை உருவாக்கியுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பரந்து விரிந்த தோட்டங்கள் முதல் ஆடம்பரமான கார்கள் வரை அவர் வைத்துள்ளார். அவரது செழுமையான வாழ்க்கை முறை, செல்வம் மற்றும் சொத்துக்கள் குறித்து பார்ப்போம்.

விளம்பரம்

வாழ்க்கை பயணம்

News18

90களின் முற்பகுதியில் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் தனது பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி உள்ளார். அவர் நிதி நெருக்கடிகளை எதிர்கொண்ட போதிலும், இசை மீதான அவரது ஆர்வம் குறையவில்லை. 1992 ஆம் ஆண்டில், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ‘ரோஜா’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே அவர் மிகவும் பிரபலமானார். மேலும் 1993ல் அவர் ஏற்கனவே சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றிருந்தார். பல ஆண்டுகளாக, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பிராந்திய எல்லைகளைத் தாண்டி, பாலிவுட் , டோலிவுட், கோலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் கூட அலைகளை உருவாக்கியது என்றே சொல்லலாம். 2009ல் Slumdog Millionaire படத்திற்கு இசையமைத்ததற்காக ரஹ்மான் இரண்டு அகாடமி விருதுகளை வென்றார். உலகளவில் மிகவும் மதிக்கப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக தனது நிலையை உயர்த்தினார்.

விளம்பரம்

Also Read:
கணவரை பிரிவதாக ஏ.ஆர். ரகுமான் குழுவில் இடம் பெற்றுள்ள இசைக்கலைஞர் அறிவிப்பு…

லாஸ் ஏஞ்சல்ஸில் பல கோடி மதிப்புள்ள அபார்ட்மெண்ட்

ஹாலிவுட்டிலும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதை தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு ஆடம்பர குடியிருப்பை ரஹ்மான் வாங்கியதாக கூறப்படுகிறது. தகவல்களின்படி , ரஹ்மான் 2010இல் இந்த குடியிருப்பை வாங்கியது மட்டுமல்லாமல், அதை ஒரு ஸ்டுடியோவாகவும் பயன்படுத்தி வந்துள்ளார். இது பல கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இது அவரது உலகளாவிய அந்தஸ்து மற்றும் இசைத் துறையில் அவருக்கு உள்ள செல்வாக்கிற்கு ஒரு சான்றாகும்.

விளம்பரம்

சென்னையில் பங்களா

சென்னை கோடம்பாக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு ஆடம்பரமான பங்களாவை வைத்திருக்கிறார். 2005ஆம் ஆண்டு வாங்கப்பட்ட இந்த பிரம்மாண்டமான பங்களாவில் தான், வேலை இல்லாத நேரத்தில் ரஹ்மான் அதிக நேரத்தை செலவிடுவார் என்று கூறப்படுகிறது. அந்த பங்களாவில் பல படுக்கையறைகள், பிரத்யேக ஸ்டுடியோ, விசாலமான உட்புறம் ஆகியவை உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள ஸ்டுடியோக்கள்

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் ஏராளமான இசை ஸ்டுடியோக்களை வைத்திருக்கிறார். சென்னையில் உள்ள அவரது முதல் ஸ்டுடியோ, Panchathan Record Inn, நாட்டின் மிகவும் பிரபலமான இசை ஸ்டுடியோக்களில் ஒன்றாக மாறியுள்ளது. மேலும், துபாய், லண்டன் ஆகிய இடங்களிலும் அவருக்கு சொந்தமாக ஸ்டியோ உள்ளது.

விளம்பரம்

News18

விலையுயர்ந்த கார்கள்

ஏ.ஆர்.ரஹ்மான் பல ஆடம்பர கார்களை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ரூ.3 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ரூ. 1 கோடிக்கும் மேல் மதிப்புள்ள ஜாகுவார் போன்ற ஆடம்பர கார்கள் வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஹ்மான் ஒரு பாடலுக்கு 3 கோடி ரூபாய் வசூலிப்பதாக கூறப்படுகிறது. மேலும், ரஹ்மான் ஒரு மணி நேர நேரலை நிகழ்ச்சிக்கு ரூ.1 முதல் 2 கோடி வரை வசூலிப்பதாக தெரிகிறது.

News18

நிகர மதிப்பு: ரூ.1,728 கோடி

ஏ.ஆர்.ரஹ்மானின் ஈர்க்கக்கூடிய பாடல் கட்டணம், லாபகரமான நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் ஏராளமான ரியல் எஸ்டேட் சொத்துக்கள் ஆகியவற்றால், அவரது நிகர மதிப்பு ரூ.1,728 கோடியை எட்டியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உலகின் பணக்கார இசைக்கலைஞர்களில் ஒருவராக அவரது நிலையை உறுதிப்படுத்துகிறது.

விளம்பரம்

.



Source link