ஆடுஜீவிதம் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு ஹாலிவுட் விருதான Hollywood Music and Media விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.
லாஸ் ஏஞ்செல்ஸில் நடைபெற்ற விழாவில் சிறந்த வெளிநாட்டு படத்திற்கான பிரிவில் சிறந்த இசைக்கான விருது ஏ.ஆர். ரகுமானுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரகுமான் சார்பாக இந்த விருதை ஆடு ஜீவிதம் படத்தின் இயக்குனர் பிளஸ்ஸி பெற்றுக் கொண்டுள்ளார். இந்த தகவலை படத்தின் ஹீரோவான பிரித்விராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், ஆடுஜீவிதம் –The Goatlife வெளிநாட்டு படத்திற்கான சிறந்த பின்னணி இசைக்கான ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா 2024 விருதை பெற்றுள்ளது. இது எங்கள் குழுவுக்கு சிறப்பானதொரு தருணம். இந்த விருதை பெற்றுக் கொள்வதில் பெருமை அடைகிறோம்.
எல்லையற்ற திறமையை கொண்ட ஏ.ஆர். ரகுமானுக்கு இந்த தருணத்தில் நன்றியை கூறிக் கொள்கிறேன். அத்துடன் ஒட்டுமொத்த படக்குழுவும் இணைந்து சிறப்பான படைப்பபை கொடுத்துள்ளனர். அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ஏ.ஆர். ரகுமானும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆடு ஜீவிதம் படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது வழங்கப்பட்டிருப்பதை கவுரவமாக கருதுகிறேன். இதனை வழங்கியுள்ள ஹாலிவுட் மியூசிக் அண்டு மீடியாவுக்கு நன்றி.
இந்த படத்தின் இயக்குனர் பிளஸ்ஸி மகிழ்ச்சியை அனைத்து இசைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களிடத்தில் பகிர்ந்து கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.
.