ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் டிவைஸ்களுக்கு இடையே ஃபைல்களை ட்ரான்ஸ்ஃபர் செய்வது நீண்ட காலமாக பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்நிலையில் பிரபல மொபைல் போன் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஒன்பிளஸ் நிறுவனம், இந்த செயல்முறையை எளிதாக்கியுள்ளது. அதாவது அதன் சமீபத்திய OxygenOS 15 அப்டேட் செய்வதன் மூலம், யூசர்கள் ஒன்பிளஸ் டிவைஸின் ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோனுக்கு ஃபைல்களை தடையின்றி ட்ரான்ஸ்ஃபர் செய்ய அனுமதிக்கிறது.
ஒன்ப்ளஸ் நிறுவனம் அதன் சமீபத்திய பதிப்பான OxygenOS 15-ஐ அறிவித்துள்ளது. வேகமான செயல்திறன், மேம்படுத்தப்பட்ட ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட் (AI) அம்சங்கள் ஆகியவை இதன் சிறப்புகளாகும்.
ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோனுக்கு ஃபைல் ட்ரான்ஸ்ஃபர்: எப்படி வேலை செய்கிறது?
-
ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோனுக்கு ஃபைல்களை ட்ரான்ஸ்ஃபர் செய்ய, ஒன்பிளஸ் யூசர்கள் தற்போது எந்தவிதமான கூடுதல் ஆப்ஸ்கள் இல்லாமல் ‘ஷேர் வித் ஐபோன்’ என்ற அம்சத்தை பயன்படுத்துவதன் மூலம் அக்சஸ் செய்யலாம்.
-
ஒன்பிளஸ் டிவைஸில் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OxygenOS 15-ஐ அப்டேட் செய்திருந்தால், ஐபோன் உடன் ஃபைல்களை ட்ரான்ஸ்ஃபர் செய்வதற்கான ஆப்ஷனை நேரடியாக ஷேர் மெனுவில் காணலாம்.
-
இதனையடுத்து நீங்கள் ஃபைல்களைத் தேர்ந்தெடுத்து, ‘ஷேர் வித் ஐபோன்’ என்பதை என்டர் செய்த உடன், ட்ரான்ஸ்ஃபர் பிராசஸ் தொடங்குகிறது. இது வெவ்வேறு பிளாட்பார்ம்களில் டாக்குமெண்ட்கள், போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் போன்ற ஃபைல்களை ட்ரான்ஸ்ஃபர் செய்ய யூசர்களை அனுமதிக்கிறது.
-
இதற்கு ஐபோன் யூசர்கள் ஃபைல்களை ட்ரான்ஸ்ஃபர் செய்ய ஆப் ஸ்டோரிலிருந்து O+ கனெக்ட் என்ற ஆப்-ஐ டவுன்லோட் செய்ய வேண்டும். இந்த ஆப்ஸ், ஐபோன் மற்றும் ஒன்பிளஸ் டிவைஸ்களுக்கு இடையே நேரடியாக இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் ஃபைல்களை ட்ரான்ஸ்ஃபர் செய்யும் பிராசஸை எளிதாக்குகிறது, மேலும் இது, பிளாட்பார்மில் விரைவாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் ஷேர் செய்ய அனுமதிக்கிறது.
-
ஐபோனுடன் கனெக்ட் செய்ய ஒன்பிளஸ் ஃபோன் தயாரிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட தற்காலிக வைஃபை ஹாட்ஸ்பாட் மூலம் ட்ரான்ஸ்ஃபர் செய்யப்படும். இதன் மூலம் 4K வீடியோக்கள் உட்பட பெரிய ஃபைல்கள் ட்ரான்ஸ்ஃபர் செய்யப்படும், ஆனால் இந்த செயல்பாட்டின்போது மற்ற வைஃபை நெட்வொர்க்குகளை டிஸ்கனெக்ட் செய்திருக்க வேண்டும்.
இதையும் படிக்க:
2025ல் செல்போன்களின் விலை அதிகரிக்குமா..? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!
ஆண்ட்ராய்டு- டு- ஐபோன் ஃபைல் ட்ரான்ஸ்ஃபர் அம்சமானது, தற்போது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OxygenOS 15 மூலம் இயங்கும் ஒன்பிளஸ் டிவைஸ்களில் பிரத்யேகமாக கிடைக்கிறது. இருப்பினும், எதிர்காலத்தில் இந்த செயல்பாட்டை மேலும் பல மாடல்களுக்கு விரிவுப்படுத்த ஒன்பிளஸ் பிராண்ட் திட்டமிட்டுள்ளது.
இந்த அப்டேட் மூலம், யூசர்களுக்கு ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் இடையே ஃபைல்களை ட்ரான்ஸ்ஃபர் செய்வதற்கான நீண்ட கால சவாலை எளிதாக்குகிறது.
.