‘மூவ் டூ ஐஓஎஸ்’ என்கிற ஆப்பை பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள டேட்டாவை ஐபோனுக்கு மாற்றுவது எப்படி என்கிற எளிய வழிமுறைகளை படிப்படியாக இங்கே காணலாம்.

* மூவ் டூ ஐஓஎஸ் ஆப்பை பயன்படுத்தி ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள டேட்டாவை ஐபோனுக்கு மாற்ற முடியும்

* மீடியா, ஆப்ஸ் மற்றும் பலவற்றை புதிய ஐபோனுக்கு மாற்றலாம்

* எனினும், SD கார்டில் உள்ள டேட்டாவை இந்த ஆப் மூலம் மாற்ற முடியாது

பெரிய டிஸ்ப்ளே, ஆக்ஷன் பட்டன் மற்றும் கேமரா பட்டன் உள்ளிட்ட புதிய பட்டன்கள், ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் சப்போர்ட் மற்றும் சக்திவாய்ந்த ஏ18 சிப் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட பல்வேறு அம்சங்களுடன் ஆப்பிள் தனது புதிய ஐபோன் 16 சீரியஸை அறிமுகப்படுத்தியுள்ளது.

விளம்பரம்

இந்தத் ஐபோன் சீரியஸ் ஐபோன் பயனர்களை வெகுவாக கவர்ந்துள்ள அதே வேளையில், பல ஆண்ட்ராய்டு பயனர்களையும் கவர்ந்துள்ளது. பல ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த ஐபோன் 16 சீரியஸ் மூலம் ஐஓஎஸ்-க்கு மாற திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அவ்வாறு மாறும் யூசர்கள், ஆண்ட்ராய்டில் இருக்கும் தங்களது டேட்டாவை ஐஓஎஸ்-க்கு மாற்றுவது எப்படி என்பதை படிப்படியான வழிகாட்டுதலுடன் இங்கே பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோனுக்கு மாற்றுவதென்பது பொதுவாக தொந்தரவாகத் தோன்றலாம். ஆனால், மாறத் திட்டமிடும் யூசர்களுக்கு ‘மூவ் டூ ஐஓஎஸ்’ என்கிற பிரத்யேக ஆப் ஒன்றை ஆப்பிள் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த ஆப் மூலம் ஆண்ட்ராய்ட் யூசர்கள் தங்கள் டேட்டாவை ஒயர்லெஸ் முறையில் ஐபோனுக்கு மாற்ற வழி செய்கிறது. இதன்மூலம், ஆண்ட்ராய்டு மொபைலில் இருக்கும் புகைப்படங்கள், கான்டாக்ட்கள், மெசேஜ்கள் மற்றும் பல்வேறு டேட்டாக்களை தங்களது புதிய ஐபோனுக்கு மாற்றிக் கொள்ளலாம். இந்த மூலம் எந்த முக்கியமான டேட்டாவையும் இழக்காமல் ஐபோனுக்கு மாற்றுவது எப்படி என்பது குறித்த படிப்படியான செயல்முறையை விரிவாகப் இங்கே பார்ப்போம்.

விளம்பரம்

ஆண்ட்ராய்டில் இருந்து ஐஓஎஸ்-க்கு டேட்டாவை மாற்றுவதற்கு முன்பாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

– உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் வைஃபை உடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்து, ஆண்ட்ராய்டின் சமீபத்திய அப்டேட்டை செய்ய வேண்டும். இதேபோல், உங்கள் புதிய ஐபோனையும் அது ஐஓஎஸ்-ன் சமீபத்திய பதிப்பிற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

– இந்த டேட்டா டிராஸ்பர் நடந்து முடியும் வரை இரண்டு மொபைலையும் சார்ஜிங்கிலேயே வைக்க வேண்டும்.

– உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனில் உள்ள அனைத்து டேட்டாவையும் ஏற்றுவதற்கு, உங்கள் புதிய ஐபோனில் போதுமான அளவு ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால், தேவையில்லாத சில ஃபைல்களை அழிக்கவும், அல்லது எந்த கோப்புகளை விட்டுச் செல்ல வேண்டும் அல்லது கிளவுட்டில் சேமிக்க வேண்டும் என்பதைத் முடிவு செய்யவும்.

விளம்பரம்

மொபைல் தயாரான பிறகு செய்ய வேண்டியவை:

– உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில், கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சென்று, “மூவ் டூ ஐஓஎஸ்” என்கிற ஆப்பை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

– உங்கள் புதிய ஐபோனை ஆன் செய்து, ஆரம்ப வேலைகளை செய்ய ஆரம்பிக்கலாம். ஆப்ஸ் அண்ட் டேட்டா ஆப்ஷனுக்கு சென்று மூவ் டேட்டா ஃப்ரெம் ஆண்ட்ராய்டு என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

– பின்னர் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில், மூவ் டூலு ஐஓஎஸ் ஆப்பை திறந்து தொடரவும் என்கிற ஆப்ஷனை தொட வேண்டும். மேலும் இந்த இணைப்பின் போது முழு நேரமும் இரண்டு மொபைலும் சார்ஜில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் ஒன்றுக்கொன்று அருகில் இருக்க வேண்டும்.

விளம்பரம்

– உங்கள் ஐபோன் ஆறு அல்லது பத்து இலக்கங்கள் கொண்ட ஒன் டைம் கோடை காட்டும், உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் இந்தக் கோடை டைப் செய்வதன் மூலம் இரண்டையும் இணைக்க முடியும்.

– இதன்மூலம் உங்கள் ஐபோன் தற்காலிக வைஃபை நெட்வொர்க்கை உருவாக்கும். உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் இருந்து இந்த நெட்வொர்க்கில் இணைந்து, டேட்டா டிரான்ஸ்பர் ஆப்ஷன் வரும் வரை காத்திருக்கவும்.

– உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில், மெசேஜ்கள், கான்ட்டாக்ட்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய நீங்கள் மாற்றக்கூடிய டேட்டாக்களை தேர்ந்தெடுத்து டேட்டா டிரான்ஸ்பரை தொடங்கலாம்.

விளம்பரம்

உங்கள் டேட்டாவின் அளவைப் பொறுத்து, அதற்கான நேரம் நிர்ணயிக்கப்படும். இந்த டிரான்ஸ்பர் முடியும் வரை இடையில் குறுக்கிட வேண்டாம்.

குறிப்பு: இந்த டேட்டா டிரான்ஸ்பரின் போது, ​​கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் இரண்டிலும் இருக்கும் டேட்டா மற்றுமே மாற்றப்படும். இந்த செயல்முறைக்குப் பிறகு, ஆப் ஸ்டோரிலிருந்து மீதமுள்ள தேவையான ஆப்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இசை, புத்தகங்கள் மற்றும் PDF களை இந்த ஐஓஎஸ் ஆப் மூலம் மாற்ற முடியாது. டேட்டா டிரான்ஸ்பருக்கு பிறகு ஐடியூன்ஸ் அல்லது பிற முறைகளைப் பயன்படுத்தி இந்த ஃபைல்களை நீங்கள் மேனுவலாக மாற்றிக் கொள்ளலாம்.

விளம்பரம்

Also Read | 
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!

ஆண்ட்ராய்டில் இருந்து ஐஓஎஸ் டிரான்ஸ்பருக்கு பிறகு…

இந்த டேட்டா டிரான்ஸ்பர் முடிந்த பிறகு, திரையில் காட்டப்படும் வழிமுறைகளை பின்பற்றி செட்அப்பை முழுமையாக முடிக்க முடியும். மேலும், உங்கள் கான்டாக்ட்கள், மெசேஜ்கள் மற்றும் மீடியா என அனைத்தும் வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்க்கவும். ஏதேனும் விடுபட்டிருந்தால், குறிப்பிட்ட கோப்புகளை மேனுவலாக மாற்றிக் கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டில் இருந்து ஐஓஎஸ் டிரான்ஸ்பரின் போது வரும் சிக்கல்கள்:

– ஆண்ட்ராய்டில் இருந்து ஐஓஎஸ்க்கு டிரான்ஸ்பர் செய்யும் போது சிக்கல் ஏதும் வந்தால், இரண்டு மொபைலையும் ரீஸ்டார்ட் செய்து, டிரான்ஸ்பரை மீண்டும் முயற்சிக்கவும்.

– இரண்டு மொபைலும் ஒய்ஃபையில் இருப்பதை உறுதிசெய்து, குறுக்கிடக்கூடிய ஸ்மார்ட் நெட்வொர்க் சுவிட்ச்சை முடக்கி, கடைசியாக ஆண்ட்ராய்டு மொபைல் டேட்டாவை ஆஃப் செய்துவிட்டு மீண்டும் முயற்சி செய்யவும்.

.



Source link