Last Updated:
ஆதார் அட்டை அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் தவறுதலாக அதனை எங்கேயும் மறந்து வைத்துவிடுவது அல்லது தொலைத்து விடுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.
ஆதார் அட்டை என்ற 12 இலக்க தனித்துவமான அடையாள எண் என்பது இந்திய அரசால் ஒவ்வொரு குடிமக்களுக்கும் வழங்கப்படும் ஒரு அத்தியாவசிய ஆவணமாக அமைகிறது. இது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கை கொண்டுள்ளது. தனிநபர் அடையாளம், முகவரி நிரூபணம் அல்லது பல்வேறு அரசு சார்ந்த சேவைகளை பயன்படுத்துதல் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது.
எனினும், ஆதார் அட்டை அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் தவறுதலாக அதனை எங்கேயும் மறந்து வைத்துவிடுவது அல்லது தொலைத்து விடுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.
இது போன்ற சூழ்நிலைகளில் முக்கியமான சில அரசு சார்ந்த சேவைகளை பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும். எனவே, உங்களுடைய ஆதார் அட்டையை தொலைத்துவிட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
Also Read: ஆதார் விவரங்களை பாதுகாப்பாக வைக்கணுமா…? லாக் செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்…!
ஒருவேளை உங்களுடைய ஆதார் அட்டையை நீங்கள் தொலைத்துவிட்டால் வீட்டிலிருந்தபடியே புதிய ஆதார் அட்டைக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
ஆதார் அட்டையை பெறுவதற்கான படிகள்:-
- முதலில் uidai.gov.in என்ற UIDAI அதிகாரப்பூர்வ வெப்சைட்டுக்கு செல்லுங்கள்.
- ஹோம் பேஜில் உள்ள ‘மை ஆதார்’ (My Aadhaar) டேபை கிளிக் செய்யுங்கள்.
- இங்கு மை ஆதார் பிரிவின் கீழ் உள்ள ‘ஆர்டர் ஆதார் ரீபிரிண்ட்’ (Order Aadhaar Reprint) என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
- உங்களுடைய 12 இலக்க ஆதார் நம்பர் அல்லது 16 இலக்க வெர்ச்சுவல் ஐடி மற்றும் ஸ்கிரீனில் டிஸ்ப்ளே செய்யப்படும் செக்யூரிட்டி கோடை என்டர் செய்யுங்கள்.
- விவரங்களை என்டர் செய்த பிறகு உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு OTP அனுப்பப்படும், அதனை என்டர் செய்யவும்.
- OTP என்டர் செய்த உடன் உங்களுடைய தகவல்கள் ஆய்வு செய்யப்படும். அனைத்தும் சரியாக இருந்தால் ஆதார் அட்டையை மீண்டும் பிரிண்ட் செய்வதற்கான கட்டணங்களை நீங்கள் செலுத்த வேண்டும்.
- பேமெண்ட் செலுத்திய பிறகு உங்களுக்கு சேவை கோரிக்கை எண் (SRN) அனுப்பி வைக்கப்படும். இதனை பயன்படுத்தி உங்களுடைய கோரிக்கையை நீங்கள் டிராக் செய்யலாம்.
- ஆதார் அட்டை உங்கள் கைக்கு வரும்வரை UIDAI வெப்சைட்டில் இ-ஆதாரை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
Also Read: 5 நிமிடங்களில் ஆன்லைன் மூலம் ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி?
நீங்கள் வைத்த கோரிக்கைக்கான ஸ்டேட்டஸ் பற்றி தெரிந்து கொள்வதற்கு UIDAI வெப்சைட்டுக்கு சென்று ‘செக் ஆதார் ரீபிரின்ட் ஸ்டேட்டஸ்’ (Check Aadhaar Reprint Status) என்ற ஆப்ஷனை ‘மை ஆதார்’ டேபில் கிளிக் செய்ய வேண்டும். உங்களுடைய SRN மற்றும் ஆதார் நம்பர் அல்லது விர்ச்சுவல் ஐடியை என்டர் செய்யுங்கள்.
ஏதேனும் உதவிக்கு UIDAI வெப்சைட்டின் 1947 என்ற இலவச எண்ணை அழைக்கலாம் அல்லது [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு இமெயில் அனுப்புங்கள்.
January 06, 2025 3:52 PM IST