மத்திய அரசு இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இளைஞர்கள் தொழில் தொடங்க 10 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்கு ஆதார் கார்டு மட்டுமே போதுமான ஆவணமாக சொல்லப்படுகிறது. எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம்.

Prime Ministers Employment Generation Programme (PMEGP) என்று சொல்லப்படும் பிரதான் மந்திரி வேலை உருவாக்கத் திட்டத்தின் கீழ் இளைஞர்கள் சொந்தமாக தொழில்தொடங்க ஊக்குவிக்கும் வகையில் கடன் வழங்கப்படுகிறது.

விளம்பரம்

Also Read: 
Gold Rate: அதிரடியாக குறைந்த தங்கம் விலை… நகைப்பிரியர்கள் ஹேப்பி… இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?

இந்த திட்டத்தின் கீழ் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்காக 2 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்காக அரசு மானியமும் வழங்கப்படுவதால் கடனை அடைப்பதும் எளிதாக இருக்கிறது.

இந்த திட்டம் உருவாக்க காரணம், இளைஞர்கள் அதிகாரம் கொண்டவர்களாகவும், தன்னம்பிக்கையை ஊக்குவிக்கவும் தொடங்கப்பட்டது. இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் கிராமப்புற பயனாளிகளுக்கு கடனிலிருந்து 35% மானியமும், நகர்புறத்திலிருந்து அப்ளை செய்வோருக்கு 25% மானியமும் வழங்கப்படுகிறது.

விளம்பரம்

இப்படி பல வகைகளில் உதவியாக இருக்கும் இந்த திட்டத்தை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்வது நல்ல யோசனையாக இருக்கும். அந்தவகையில் நீங்களும் சொந்த தொழில் தொடங்க நினைத்தால் பயன்படுத்திக்கொள்ளலாம். குறைந்த வட்டியில், அதுவும் மானியத்துடன் கிடைக்கும்போது இதை விட சிறப்பு வேறென்ன இருக்க முடியும். சொந்த தொழில் செய்து சாதிக்க நினைக்கும் எந்தவொரு இளைஞருக்கும் இது நல்வாய்ப்பாக இருக்கும். அதுமட்டுமன்றி உங்கள் தொழில் மூலம் மற்றவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

News18

தகுதிகள் என்னென்ன..?

நீங்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். நீங்கள் தொடங்கும் தொழில் சிறு , நடுத்தர அல்லது உள்நாட்டு உற்பத்தி வர்த்தகமாக இருந்தால் கடன் வழங்கப்படும். அதேபோல் அரசாங்கம் கொடுக்கும் இந்த கடன் உங்கள் செலவைப் பொறுத்து திட்டத்தில் மாற்றங்கள் இருக்கும். அதேபோல் பகுதி , வகை மற்றும் திட்டத்தின் செலவை பொறுத்து மானிய விகிதங்கள் இருக்கும்.

விளம்பரம்

Also Read |
Ayushman Card : மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி..?

பிரதான் மந்திரி வேலை உருவாக்கத் திட்டம் தொடங்க என்னென்ன ஆவணங்கள் தேவை.?

  1. ஆதார் அட்டை,
  2. பான் கார்டு,
  3. வங்கிக் கணக்கு ஸ்டேட்மெண்ட்,
  4. வணிகம் தொடர்பான ஆவணங்கள்
  5. ஜி.எஸ்டி மற்றும் நில ஆவணங்கள் பதிவு எண்

பிரதான் மந்திரி வேலை உருவாக்கத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி..?

இதற்கு ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். அதற்கு PMEGP எனப்படும்
https://www.kviconline.gov.in/pmegpeportal/bankModule/index.jsp என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். பின் உங்களுக்கென தனி கணக்கை உருவாக்க வேண்டும். அதில் உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண், மெயில் ஐடி, போன்ற தகவல்களுடன் இன்னும் சில தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். அவற்றை பூர்த்தி செய்து முடித்ததும் உங்கள் பெயரில் கணக்கு உருவாகிவிடும். பின் விண்ணப்ப படிவம் தோன்றும். அதில் வணிகத்தின் பெயர், அதன் வகை, முகவரி, உள்ளிட்ட தகவல்களை கொடுக்க வேண்டும். அதோடு சில தேவையான ஆவணங்களை கேட்கும். அனைத்தையும் சரியாக பூர்த்து செய்தபின் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தபின் உங்களுக்கான கோரிக்கை படிவம் சென்றுவிடும்.

விளம்பரம்

.



Source link