இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் இந்தியாவில் உள்ள அனைவரும் ஆதார் அட்டையில் உள்ள தங்களுடைய பெயர், முகவரி அல்லது பிறந்த தேதி போன்ற விவரங்களை ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு இலவசமாக அப்டேட் செய்யலாம் என்பதை தெரிவித்துள்ளது. இந்த மொத்த செயல்முறையும் ஆன்லைனில் செய்யப்படுவதன் மூலம் யூசர்கள் வீட்டில் இருந்தபடியே தங்களுடைய விவரங்களை ஆதார் அட்டையில் அப்டேட் செய்து கொள்ளலாம்.
ஆதாரில் உள்ள விவரங்களை எதற்காக அப்டேட் செய்ய வேண்டும்?
10 வருடங்களுக்கு மேல் அப்டேட் செய்யப்படாமல் இருக்கும் ஆதார் விவரங்களை கரண்ட்டில் வைக்குமாறு UIDAI பரிந்துரை செய்துள்ளது. ஆதார் விவரங்களை இன்றைய நிலவரப்படி வைப்பது பின்வரும் பலன்களைத் தரும்.
-
ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை அப்டேட் செய்வதன் மூலம், அதில் உள்ள விவரங்கள் அனைத்தும் இப்போதைய உங்களுடைய தகவல்களை பிரதிபலிக்கும்.
-
அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த சேவைகள் கிடைப்பது எளிதாகிறது.
-
ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு செய்யும்போது, அதற்கான வெற்றி விகிதம் அதிகரிக்கிறது.
ஆதார் அட்டையில் உள்ள விபரங்களை வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?
ஆதாரில் உள்ள விவரங்களை ஆன்லைனில் இலவசமாக அப்டேட் செய்வதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்:
-
myaadhaar.uidai.gov.in என்ற UIDAI வெப்சைட்டுக்கு செல்லுங்கள்.
-
அப்டேட் பிரிவில் காணப்படும் “அப்டேட் யுவர் ஆதார்” என்பதன் கீழ் உள்ள “மை ஆதார்” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
-
அப்டேட் பக்கத்தில் காணப்படும் “அப்டேட் ஆதார் டீடைல்ஸ் (ஆன்லைன்)” என்பதை கிளிக் செய்து “டாக்குமெண்ட் அப்டேட்” என்பதை தேர்வு செய்யவும்.
-
உங்களுடைய ஆதார் நம்பர் மற்றும் கேப்சாவை நிரப்பி “சென்ட் OTP” என்பதை கிளிக் செய்யவும்.
-
உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள OTP-ஐ பயன்படுத்தவும்.
-
உங்களுடைய பெயர் அல்லது முகவரி போன்ற அப்டேட் செய்யப்பட வேண்டிய விவரங்களை தேர்வு செய்யவும்.
-
ஆதாரில் உள்ள விவரங்களை அப்டேட் செய்து அதற்கான டாக்குமென்ட்களையும் சமர்ப்பிக்கவும்.
-
செயல்முறையை நிறைவு செய்து உங்களுடைய ஆதார் அப்டேட்டின் நிலை குறித்து தெரிந்து கொள்வதற்கு அப்டேட் ரெக்வஸ்ட் நம்பர் (URN) என்பதை சேமித்து வைக்கவும்.
முக்கியமான குறிப்புகள்: ஆதாரிலுள்ள கருவிழி, கைரேகைகள், மொபைல் நம்பர் அல்லது புகைப்படம் போன்றவற்றை ஆஃப்லைன் முறை மூலமாக மட்டுமே உங்களால் அப்டேட் செய்ய முடியும். மேலும் பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்றவற்றை ஒருமுறை மட்டுமே அப்டேட் செய்யலாம்.
இதையும் படிக்க:
சிடிசி என்பது உங்கள் சம்பளம் அல்ல; உண்மையில் நீங்கள் சம்பாதிப்பது எவ்வளவு தெரியுமா…?
ஆஃப்லைன் அப்டேட் செயல்முறை
-
ஆஃப்லைனில் ஆதாரை அப்டேட் செய்ய நினைப்பவர்கள் ஆதார் என்ரோல்மென்ட் அல்லது அப்டேட் படிவத்தை UIDAI வெப்சைட்டுக்கு சென்று டவுன்லோட் செய்யவும்.
-
ஆதார் சேவை மையத்திற்கு சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவம் மற்றும் அதற்கான டாக்குமென்ட்களை வழங்கவும்.
-
பயோமெட்ரிக் விவரங்களை பதிவு செய்யுங்கள்.
-
உங்களுடைய கோரிக்கையை டிராக் செய்வதற்கு உங்களுக்கு URN கொண்ட ஒரு ஸ்லிப் வழங்கப்படும்.
ஆனால், ஆதாரில் உள்ள விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 14, 2024. அதற்குப் பிறகு ஆதாரில் உள்ள விவரங்களை அப்டேட் செய்வதற்கு நீங்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும்.
.