உங்களுடைய பெயர், முகவரி அல்லது பிறந்த தேதி போன்ற விவரங்களை ஆதார் அட்டையில் மாற்ற வேண்டுமா, அப்படி என்றால் அதனை உங்கள் வீட்டில் இருந்தபடியே இலவசமாக செய்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்களுடைய ஆதார் அட்டையை டிசம்பர் 14, 2024க்குள் ஏன் அப்டேட் செய்ய வேண்டும்? நீங்கள் உங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை அப்டேட் செய்து 10 வருடங்களுக்கு மேல் ஆகி இருந்தால் அதனை டிசம்பர் 14, 2024-க்குள் அப்டேட் செய்ய வேண்டும் என்பதை இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

விளம்பரம்

உங்களுடைய ஆதார் விவரங்களை அப்டேட் செய்வது ஆதாரில் உள்ள விவரங்கள் இன்றைய நிலவரப்படி இருப்பதை உறுதி செய்யும். அரசு மற்றும் தனியார் சேவைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்புகள் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு உதவும்.

ஆன்லைனில் ஆதார் விவரங்களை அப்டேட் செய்வது எப்படி?

உங்களுடைய ஆதார் அட்டையை இலவசமாக ஆன்லைனில் அப்டேட் செய்வதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்:-

  • myaadhaar.uidai.gov.in என்ற UIDAI வெப்சைட்டுக்கு செல்லவும்.

  • அதில் ‘மை ஆதார்’ என்பதை தேர்வு செய்து ‘அப்டேட் யுவர் ஆதார்’ என்பதை கிளிக் செய்யுங்கள்.

  • இப்போது ‘அப்டேட் ஆதார் டீடைல்ஸ் (ஆன்லைன்)’ பக்கத்தில் ‘டாக்குமெண்ட் அப்டேட்’ என்பதை தேர்வு செய்யவும்.

  • உங்களுடைய ஆதார் நம்பர் மற்றும் கேப்சா கோடு ஆகியவற்றை நிரப்பி ‘Send OTP’ என்பதை கிளிக் செய்யுங்கள்.

  • உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள OTP-ஐ பயன்படுத்தி லாகின் செய்யவும்.

  • நீங்கள் அப்டேட் செய்ய விரும்பும் விவரங்களை தேர்வு செய்யவும்.

  • விவரங்களை அப்டேட் செய்துவிட்டு தேவையான டாக்குமென்ட்களை அப்லோடு செய்யுங்கள்.

  • ‘சப்மிட் அப்டேட் ரெக்வெஸ்ட்’ என்பதை கிளிக் செய்து உங்களுடைய விண்ணப்பத்தை ட்ராக் செய்வதற்கு SMS மூலமாக அனுப்பப்பட்டுள்ள அப்டேட் ரெக்வஸ்ட் நம்பரை சேமித்து வைக்கவும்.

  • முக்கியமான விவரங்கள் ஒருவேளை உங்களுடைய கருவிழி, கைரேகை, மொபைல் நம்பர் அல்லது புகைப்படம் போன்றவற்றில் மாற்றங்கள் செய்ய வேண்டுமானால் அதனை நீங்கள் ஆஃப்லைன் முறையில் மட்டுமே செய்ய முடியும்.

  • பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்றவற்றை ஒருமுறை மட்டுமே அப்டேட் செய்யலாம்.

இதையும் படிக்க:
டிராவல் கிரெடிட் கார்டுகள் மூலம் ரிவார்ட் புள்ளிகளை அதிகரிப்பது எப்படி…? பின்பற்ற வேண்டிய 5 வழிகள்…

ஆஃப்லைன் அப்டேட் செயல்முறை

  • UIDAI வெப்சைட்டில் இருந்து ஆதார் புதுப்பிப்பு படிவத்தை டவுன்லோட் செய்து எடுக்கவும்.

  • நிரப்பப்பட்ட படிவம் மற்றும் தேவையான டாக்குமென்ட்களை அருகில் உள்ள ஆதார் மையம் அல்லது ஆதார் சேவா கேந்திராவில் சமர்ப்பிக்கவும்.

  • உங்களுடைய பயோமெட்ரிக் விவரங்களை வழங்கவும்.

இதையும் படிக்க:
SBI vs HDFC vs கனரா வங்கி: 1 வருட FD திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்கள்!!!

எனவே உங்களுடைய ஆதார் விவரங்களை டிசம்பர் 14, 2024-க்குள் இலவசமாக அப்டேட் செய்து விடுங்கள். இந்த தேதிக்கு பிறகு உங்களுடைய ஆதார் அட்டையில் மாற்றங்களை செய்வதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

விளம்பரம்

.



Source link