Last Updated:

Donald Trump | ஆபாச நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில், டொனால்ட் டிரம்புக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்காமல் மேன்ஹேட்டன் நீதிமன்றம் விடுவித்தது.

News18

ஆபாச நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் குற்றவாளி என ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்ட டொனால்ட் டிரம்புக்கு, சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்காமல் மேன்ஹேட்டன் நீதிமன்றம் விடுவித்தது.

அமெரிக்காவில் ஆபாசப்பட நடிகையான ஸ்டார்மி டேனியல்ஸ் என்பவருக்கும் டிரம்புக்கும் இடையே முன்னர் உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் டிரம்ப் போட்டியிட்டுள்ளார். இதற்கிடையே, இந்த உறவு குறித்து ஸ்டார்மி டேனியல்ஸ் வெளியில் கூறாமல் இருக்க, டிரம்ப் அவருக்கு பணம் கொடுத்துள்ளார். இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Also Read: North Korea: வடகொரியாவில் தடை செய்யப்பட்ட 5 விஷயங்கள்..! கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..?

இந்நிலையில், கடந்தாண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இதையடுத்து அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப், வரும் 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இதற்கிடையே தான், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது. இதை எதிர்த்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பான வழக்கில் டிரம்புக்கு எதிரான 34 குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்டன.

இதையடுத்து ஜனவரி 10ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், அதிபர் என்ற முறையில் தண்டனைகளில் இருந்து டிரம்ப்பை விடுவிப்பதாக நீதிபதி ஜூவான் எம் மெர்சன் தீர்ப்பளித்து உள்ளார். இதை தொடர்ந்து, வரும் 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்ட் டிர்ம்ப் பதவியேற் உள்ளார்.



Source link