இந்தியாவில் ஐபோன் 16 ப்ரோவின் தள்ளுபடி விலை மற்றும் வங்கி சலுகைகள்:

இந்திய சந்தையில் ஐபோன் 16 ப்ரோவின் 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.1,19,900 விலையில் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், விற்பனையின் போது இந்த ஃபிளாக்ஷிப் போனின் விலை

ரூ.1,16,300 என பட்டியலிடப்பட்டுள்ளது. இது தவிர, உங்களிடம் HDFC பேங்க் கார்டு இருந்தால் ரூ.4,500 வங்கிச் சலுகையைப் பெறுவீர்கள்.

மேலும், ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ பேங்க் கார்டுகளுக்கு ரூ 4,000 வங்கிச் சலுகையைப் பெறுவீர்கள். இதன் பிறகு இந்த ஐபோனின் விலை ரூ.1,11,800ஆக இருக்கும். அதே நேரத்தில், இந்த போன் ஆனது பிளிப்கார்ட் ரூ.60,600 எக்ஸ்சேஞ்ச் சலுகையை வழங்குகிறது. உங்களிடம் பழைய போன் இருந்தால், அதை மாற்றிக் கொள்வதன் மூலம் தள்ளுபடியைப் பெறலாம். இருப்பினும், எக்ஸ்சேஞ்ச் சலுகையில் பழைய போனின் விலை அதன் ஸ்டேட்டஸ் மற்றும் மாடலின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

ஐபோன் 16 ப்ரோ விவரக் குறிப்புகள்:

ஐபோன் 16 ப்ரோ ஆனது 6.3 இன்ச் சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது தெளிவான மற்றும் துடிப்பான காட்சிகளை வழங்குகிறது. இது ஒரு மேட் கிளாஸ் பேகே உடன் டியூரபில் டைட்டானியம் ஃபிரேமை கொண்டுள்ளது. இது, இந்த போனின் ஸ்டைல் ​​மற்றும் ஆயுள் இரண்டையும் உறுதி செய்கிறது.

இதையும் படிக்க: பட்ஜெட்டுக்கு ஏற்ற ப்ரீபெய்ட் பிளான்கள்… வோடஃபோன் ஐடியாவின் புதிய அறிமுகம்..!

இந்த புதிய ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போனில் சமீபத்திய A18 ப்ரோ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 3 நானோமீட்டர் செயல்முறையை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ஐபோன் 16 ப்ரோ மாடலில் 6 கோர் CPU மற்றும் GPU மற்றும் 16 கோர் நியூரல் எஞ்சின் உள்ளது.

ப்ரோ கேமராவைப் பொறுத்தவரையில், 48MP மெயின் கேமரா, 48MP அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை அடங்கும். இந்த ப்ரோ மாடலில் உள்ள பேட்டரி ஆனது 27 மணி நேர வீடியோ பிளேபேக்கை ஆதரிக்கிறது. அதே நேரத்தில் USB டைப்-C போர்ட், கேமரா கேப்சூர் பட்டன், ஆக்ஷன் பட்டன், IP68 மதிப்பீடு, MagSafe சார்ஜிங் மற்றும் NFC போன்ற இணைப்பு விருப்பங்களை வழங்குகிறது.

இதையும் படிக்க: 43 மணி நேரம் வரை பேட்டரி ஆயுள்… ஒன்பிளஸ் பட்ஸ் ஏஸ்2 இயர்பட்ஸ் அறிமுகம்..!

இந்த விற்பனையில், ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, மற்ற ஐபோன் மாடல்கள் மற்றும் மேக் புக், ஐபாட்கள், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஏர் போட்கள் ஆகியவற்றிலும் நல்ல தள்ளுபடியைப் பெறலாம்.



Source link