Last Updated:
ஒன்பிளஸ் வாட்ச் 2 கடந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அதன் அடுத்த வெர்ஷனான ஒன்பிளஸ் வாட்ச் 3 -யின் வெளியீடு, அதன் அம்சங்கள் குறித்து சமீப காலமாகவே சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் வெளியாகி இருக்கும் ஒரு தகவலில், ஒன்பிளஸ் வாட்ச் 3 -இல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட சில குறிப்பிட்ட அம்சங்கள் இடம்பெற இருப்பதாக கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் வாட்ச் 2 கடந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அதன் அடுத்த வெர்ஷனான ஒன்பிளஸ் வாட்ச் 3 -யின் வெளியீடு, அதன் அம்சங்கள் குறித்து சமீப காலமாகவே சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் வெளியாகி இருக்கும் ஒரு தகவலில், ஒன்பிளஸ் வாட்ச் 3 -இல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட சில குறிப்பிட்ட அம்சங்கள் இடம்பெற இருப்பதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, ஒன்பிளஸின் ஓஹெல்த் ஆப்பின் சமீபத்திய அப்டேட்டுக்கு பிறகு, இதுகுறித்த அம்சங்களை காண முடிந்ததாக கூறப்படுகிறது. எனினும், ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் -இன் உலகளாவிய வெளியீட்டின் போது, ஒன்பிளஸ் வாட்ச் 3 -யும் உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் வாட்ச் 3 இல் இடம்பெறும் புதிய சுகாதார அம்சங்கள், ஓஹெல்த் ஆப்பின் சமீபத்திய பதிப்பான 4.30.11_e27d199_241122 இன் ஏபிகே டியர்டவுன் மூலம் ஆண்ட்ராய்டு ஆணையத்தால் கண்டறியப்பட்டது. இந்த வரவிருக்கும் புதிய மாடலில் ஈசிஜி அம்சம் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.
இந்த வரவிருக்கும் புதிய அம்சங்களின் மூலம் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் (AFib), அடிக்கடி வரும் பிவிசி-கள், அதிக அல்லது குறைந்த இதயத் துடிப்புகள் மற்றும் பலவற்றைக் கண்டறிய முடியும் என்பதைக் காட்டும் ஸ்கிரீன்ஷாட்களையும் ஆணையம் பகிர்ந்துள்ளது. இந்த புதிய அம்சங்களை பயன்படுத்த, வாட்ச் இணைக்கப்படும் மொபைலுக்கு குறிப்பிட்ட சில அம்சங்கள் தேவைப்படலாம், அதேநேரத்தில் அதனை வாட்ச்சிலும் பயன்படுத்த முடியும்.
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவல்படி, சமீபத்திய ஆப் அப்டேட் மூலம் மணிக்கட்டு வெப்பநிலை (Wrist Temperature) செயல்பாட்டையும் இதன்மூலம் கணக்கிட முடியும். எனினும், யூசர்கள் இந்த அம்சத்தை அணுக, குறைந்தப்பட்சம் ஐந்து நாட்களுக்கு வாட்ச்சுடன் தூங்க வேண்டும், மேலும், குறைந்தப்பட்சம் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் நீடித்த தூக்கம் தேவை, இதன்மூலம் அடிப்படை வெப்பநிலையை தெரிந்து கொள்ள முடியும்.
அதுமட்டுமின்றி, ஒன்பிளஸ் வாட்ச் 3 சீரிஸ் 60-நிமிட செக்அப் அம்சத்தையும் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த செயல்பாடு இதய ஆரோக்கியம், இரத்த நாளங்களின் நெகிழ்ச்சி மற்றும் தூக்கத்தின் போது வரும் குறட்டை போன்ற உடல்நலம் குறித்த ஏழு அம்சங்களை பயன்படுத்தி இரத்த ஆக்ஸிஜன் அளவுகள், ஈசிஜி அளவீடுகள், தூக்கம், இரத்த நாளங்களின் வயது மற்றும் பலவற்றைக் கண்காணிக்கிறது. மேலும், ஓஹெல்த் ஆப்பானது உடல்நலம் குறித்த அனைத்து தகவல்கள் மற்றும் ஆரோக்கிய அம்சங்களை வழங்கும் ஹெல்த் டேப்பை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் உடன் ஒன்பிளஸ் வாட்ச் 3 -யும் உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன், ஸ்னாப்டிராகன் டபிள்யூ5 ஜெனரல் 1 SoC இல் இயங்கும். மேலும் இந்த வாட்சில் 631mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 648mAh பேட்டரி பேக்அப்பையும் கொண்டிருக்கலாம்.
January 19, 2025 2:31 PM IST