இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்காரின் மகன், பெண்ணாக மாறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்காரின் மகன் , பெண்ணாக மாறிய புகைப்படம் வெளியாகியுள்ளது. சஞ்சய் பங்காரின் மகன் ஆர்யன் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் செலுத்தி வந்தார். 23 வயதாகும் ஆர்யன் கடந்த சில மாதங்களாக பாலின மாற்றத்துக்கான சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் வசித்து வரும் ஆர்யன் தனது பெயரை அனயா என்று மாற்றிக்கொண்டார்.

விளம்பரம்

கடந்த சில ஆண்டுகளாக மகேந்திர சிங் தோனி, விராட் கோலியுடன் எடுத்துக் கொண்ட படங்களையும் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய வீடியோவையும் அனயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பின்னர் அதை நீக்கிவிட்டார்.

எனினும் அனயாவின் புகைப்படங்கள் மற்றும் நீக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

.

  • First Published :



Source link