இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் கொண்டு கவாஸ்கர் – பார்டர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறுவதில் மிக முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது.
இந்த தொடரை இந்திய அணி 4-0 என்ற கணக்கில் என்ற கணக்கில் வென்று விட்டால் இந்தியா நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும். இதில் மாற்றம் ஏற்பட்டால் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளின் அடிப்படையில், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறலாம் அல்லது தகுதி இழக்கலாம்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடாவிட்டால், பும்ரா இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில், சுப்மன் கில், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் அடங்கிய முதல் குழு ஞாயிற்றுக்கிழமை இரவு ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றது. டெஸ்ட் தொடர் குறித்து மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், முதல் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா விளையாடுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று கூறினார்.
இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளதால், ரோகித் ஷர்மா தனது மனைவியுடன் இருக்க விடுப்பு கேட்டதாக தெரிகிறது. ரோகித் பங்கேற்காவிட்டால் பும்ரா அணியை வழிநடத்துவார் என்றும் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ரோகித் சர்மாவுக்குப் பிதல், அபிமன்யு அல்லது கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவர் என்றும் கம்பீர் கூறினார். இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது.
.