Last Updated:

ஒருவேளை இந்த விதிக்கு உட்படாவிட்டால் சோஷியல் மீடியா பிளாட்ஃபார்ம்களுக்கு குறிப்பிடத்தக்கது.

News18

பதினாறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சோஷியல் மீடியா பயன்படுத்துவதற்கு தடை விதித்து ஆஸ்திரேலியா அரசு முதல் முறையாக உலக அளவில் ஒரு சட்டத்தை அமல்படுத்த உள்ளது என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. தற்போது சோஷியல் மீடியா காரணமாக இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு யுனைடெட் கிங்டம் இதே மாதிரியான மற்றொரு முயற்சியை எடுத்துள்ளது.

குறிப்பாக குழந்தைகளுக்கு ஆன்லைன் பாதுகாப்பு வழங்குவதற்காகவே இந்த முடிவில் ஈடுபட்டுள்ளதாக யுனைடெட் கிங்டம் டெக்னாலஜி செகரட்டரி பீட்டர் கெயில் BBC -யிடம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஸ்மார்ட் போன்கள் மற்றும் சோஷியல் மீடியா போன்ற தொழில்நுட்பங்களின் தாக்கம் இளைஞர்களை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதை சம்பந்தமான கூடுதல் ஆராய்ச்சி இதில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சோஷியல் மீடியாவை தடை செய்வதற்கான பரிந்துரை வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இது குறித்த முடிவை எடுப்பதற்கு முன்பு அதற்கான பல ஆதாரங்கள் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார். மெட்டா, டிக் டாக் மற்றும் X போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய பிளாட்ஃபார்ம்களில் பதிவிடப்படும் கன்டென்டுகளை அதிக பொறுப்புடன் கையாள வேண்டும் எனவும், தீங்கு விளைவிக்கும் கன்டண்டுகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் ஆன்லைன் சேஃப்டி ஆக்ட் கூறியுள்ளது.

இதையும் படிங்க : Highest Population: 2100-இல் அதிக மக்கள் தொகை கொண்ட முதல் 10 நாடுகள்! பட்டியலில் இந்தியாவின் இடம் எது தெரியுமா?

ஒருவேளை இந்த விதிக்கு உட்படாவிட்டால் சோஷியல் மீடியா பிளாட்ஃபார்ம்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் அபராதங்கள் விதிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. OSA என்று சொல்லப்படும் ஆன்லைன் சேஃப்டி ஆக்ட் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் சோஷியல் மீடியா நிறுவனங்கள் ஏற்கனவே ஒரு சில குறிப்பிட்ட தக்க மாற்றங்களை செய்துள்ளனர். உதாரணமாக இன்ஸ்டாகிராம் டீனேஜர்களுக்கான புதிய அக்கவுண்டை உருவாக்கி வருகிறது. மேலும் Roblox சிறு பிள்ளைகள் பிறருக்கு மெசேஜ் அனுப்புவதற்கு தடை விதித்துள்ளது.

எனினும் சோஷியல் மீடியா காரணமாக குழந்தைகளுக்கு ஏற்படும் தீங்கான விளைவுகளை குறைப்பதற்கு அரசு எந்த விதமான முயற்சிகளையும் எடுக்கவில்லை என்று பலர் தொடர்பு விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். சோஷியல் மீடியா மீது தடை விதிப்பது என்பது கடலளவு உள்ள பிரச்சனையில் ஒரு சிறு துளிக்கு சமம் என்று ஒரு சிலர் கேலி செய்து வருகின்றனர். மேலும் டீனேஜர்கள் பிரச்சனை தரக்கூடிய விஷயங்களை ஆன்லைனில் பார்ப்பதற்கு புதிய வழிகளை கண்டுபிடித்து வருவதாகவும் வருத்தம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

எனவே அரசு இதுகுறித்து விரிவாக யோசிக்க வேண்டும். இது கலாச்சாரத்தை பாதிக்கக் கூடிய ஒரு பிரச்சனையாக உள்ளது. மேலும் சட்டத்தை இதில் உட்படுத்தி விஷயங்களை சரி செய்ய வேண்டும் என்று பலர் கருதுகின்றனர். ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சோஷியல் மீடியா தடை செய்யப்பட்டதை அடுத்து அந்நாட்டில் இது சம்பந்தமாக பல விவாதங்கள் எழுந்தது. இந்த விதி அமல்படுத்தப்பட்ட 12 மாதங்களுக்கு பிறகு வயது வரம்பு கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி ஆல்பனீஸ் தெரிவித்துள்ளார்.

சோஷியல் மீடியா பயன்படுத்துவதற்கு வயது வரம்பு கொடுக்கப்பட்டது ஒரு பிரச்சனையை சரி செய்வதற்கான சரியான தீர்வாக இருக்காது என்று 140-க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய மற்றும் சர்வதேச அமைப்புகள் ஆல்பனேஷுக்கு கடந்த மாதம் திறந்த கடிதம் ஒன்றை எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link