இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, பல தொழில்களில் தனது இருப்பை உறுதிசெய்துள்ளார். இதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்தும் பணியாற்றி வருகிறார். அந்த வகையில், டிஜிட்டல் துறையில் புரட்சியை ஏற்படுத்தும்விதமாக ஜியோவை அறிமுகப்படுத்தினார். ஜியோ ஆப்பையும் அறிமுகப்படுத்தினார். இதில், ஜியோ சினிமா, ஜியோ மார்ட், ஜியோ ஸ்பியர், ஜியோ பைனான்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன.

இவ்வாறான, பல பிரிவுகளில் ஜியோ சாவனும் ஒன்று. ஜியோ சாவன் என்பது பாடல்கள், பாட்காஸ்ட்கள் மற்றும் ஆடியோ புக்குகளின் பெரிய நூலகத்தை வழங்கும் ஒரு விரிவான மியூசிக் ஸ்ட்ரீமிங் பிளாட்பார்மாகும். இந்த பிரபலமான, ஜியோ சாவன் ஆப் உருவாக்கத்திற்கு முக்கிய காரணம் ரிஷி மல்ஹோத்ராதான். இந்தியாவில் டிஜிட்டல் இசை மீதான கண்டோட்டத்தை மாற்றியமைத்துள்ள இந்த ஆப், இந்தியாவில் ஸ்பாட்டிஃபை-க்கு இணையான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

ஜியோ சாவனை இணைந்து நிறுவி, அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் ரிஷி மல்ஹோத்ரா, தனது தலைமை மற்றும் வணிக உத்திகள் மூலம் மியூசிக் பிளாட்ஃபார்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இசை மற்றும் டிஜிட்டல் துறையில் அவருக்கு இருந்த ஆழமான புரிதல், ஜியோ சாவன் ஆப்பை இந்தியாவில் மில்லியன் கணக்கான பயனர்களிடம் கொண்டு சென்றது.

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தை சேர்ந்த இசை நகரமான நாஷ்வில்லை சேர்ந்த மல்ஹோத்ரா, நுஸ்ரத் ஃபதே அலிகான் மற்றும் லதா மங்கேஷ்கர் போன்ற இந்திய ஜாம்பவான்கள் மற்றும் லெட் செப்பெலின் மற்றும் மைல்ஸ் டேவிஸ் போன்ற சர்வதேச கலைஞர்களின் இசையால் ஈர்க்கப்பட்டார்.

இந்திய மற்றும் மேற்கத்திய இசை இரண்டிலும் அவருக்கு இருந்த தொடர்பு, இசை ஸ்ட்ரீமிங் துறையில் அவருக்கு ஒரு தனித்துவமான பார்வையை அளித்தது. இந்திய சந்தையில் டிஜிட்டல் தளத்தில், ஒரு இடைவெளியைக் கண்டறிந்த ரிஷி மல்ஹோத்ரா, தனது இணை நிறுவனர்களான வினோத் பட் மற்றும் பரம்தீப் சிங் ஆகியோருடன் சேர்ந்து, 2007இல் சாவனைத் தொடங்கினார். ஆரம்பத்தில், சாவன் என்பது ஐடியூன்ஸ் மற்றும் அமேசான் போன்ற தளங்களுக்கு இந்திய இசையை டிஜிட்டல் மயமாக்குவதில் கவனம் செலுத்தும் ஒரு பி2பி செயல்முறையாகவே இருந்தது. இந்த நடவடிக்கை, ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க வருவாயைக் கொண்டு வந்தது.

இதையும் படிக்க: எஸ்பிஐ vs போஸ்ட் ஆபிஸ்… 5 ஆண்டுகள் FD-க்கு இரண்டில் எது அதிக லாபத்தை வழங்குகிறது தெரியுமா?

“பாடல் தொடக்கம், திரைப்படத்தின் பெயர், இசையமைப்பாளர் அல்லது நடிகர் போன்ற எதன் மூலமும் ஒருவர் நினைப்பதை கண்டுபிடிக்க எளிதான ஒரு சேவையை ஏன் உருவாக்கக்கூடாது என்று நாங்கள் நினைத்தோம், எழுத்துப் பிழையுடன் தேடினால்கூட, சரியான சேவையை வழங்க வேண்டும் என்று நினைத்தோம்” என்று மிண்ட் உடனான ஒரு நேர்காணலில் ரிஷி மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டில், இந்தியாவில் வளர்ந்துவரும் ஸ்மார்ட்போன் சந்தையை கருத்தில் கொண்டு சாவன் அதன் ஆப்பை அறிமுகப்படுத்தியது. ஸ்பாட்டிஃபை அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பல்வேறு வகையான மற்றும் பல மொழிகளை உள்ளடக்கிய ஒரு தளத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட சாவன், இந்திய இசை ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்ததால், முகேஷ் அம்பானியின் கவனத்தையும் பெற்றது.

இதையும் படிக்க: வாய்ஸ்-ஒன்லி ப்ரீபெய்ட் பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ள ஜியோ நிறுவனம்…! 

இதையடுத்து அம்பானி, 2018ஆம் ஆண்டில் தனது தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவுடன் இதனை இணைக்க, சாவனில் முதலீடு செய்தார். 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் (தோராயமாக ரூ. 8300 கோடி) மதிப்புள்ள இந்த ஒப்பந்தம், ஜியோ சாவன் உருவாகுவதற்கு வழிவகுத்தது. இன்று, ஜியோ சாவன் இந்திய இசை ஸ்ட்ரீமிங் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு தடையற்ற அனுபவத்தையும் வழங்கி வருகிறது.



Source link