பிரபல இ-காமர்ஸ் பிளாட்ஃபார்மான ஃபிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் ஸ்பெஷல் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த விற்பனயில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 15 Pro ஸ்மார்ட் ஃபோன் மிகவும் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் Pro அம்சங்களை மிகவும் மலிவு விலையில் பெற விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த விருப்பமாக அமைகிறது. 2023-ஆம் ஆண்டு அறிமுகமான ஆப்பிளின் பிரீமியம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் ஃபோனான iPhone 15 Pro, A17 ப்ரோ சிப்செட் இயக்கப்படுகிறது. இந்த மொபைல் 6.1-இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே மற்றும் 3x டெலிஃபோட்டோ லென்ஸைக் கொண்டுள்ளது.

விளம்பரம்

ஆப்பிள் சமீபத்தில் தான் அதன் சக்திவாய்ந்த ஹார்ட்வேர் மற்றும் அம்சங்கள் நிரம்பிய சிறந்த செயல்திறன் கொண்ட iPhone 16 Pro சீரிஸை அறிமுகப்படுத்தியது. எனினும் iPhone 15 Pro இன்னும் ஹை-என்ட ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்குகிறது. இந்த பண்டிகை சீசனில் iPhone 15 Pro-விற்கு ஃபிளிப்கார்ட்டின் BBD-ல் வழங்கப்படும் ஆஃபர் விவரங்களைப் பார்க்கலாம்.

Flipkart-ல் iPhone 15 Pro-விற்கு வழங்கப்படும் தள்ளுபடி:

ஃபிளிப்கார்ட்டின் Big Billion Days விற்பனையில் ஐபோன் 15 ப்ரோவின் 256GB வேரியன்ட் விலை ரூ.1,04,999-ஆக குறைந்துள்ளது. அதன் வெளியீட்டு விலையான ரூ.1,23,310-லிருந்து மேற்கண்ட விலைக்கு குறைந்துள்ளது. இந்த அதிரடி ஆஃபரில் ஃபிளிப்கார்ட் வழங்கும் அடிப்படை தள்ளுபடி மூலம் ஐபோன் 15 ப்ரோவின் விலை ரூ.1,09,999-ஆக குறைகிறது. தொடர்ந்து குறிப்பிட்ட வங்கி அட்டைதாரர்களுக்கு கூடுதலாக வழங்கப்படும் ரூ.5,000 தள்ளுபடி மூலம் இதன் விலை ரூ.1,04,999ஆகிறது. இதற்கு கூடுதலாக வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய போன்களை மாடல் மற்றும் அதன் கன்டிஷனைப் பொறுத்து ரூ.40,000 வரை எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளலாம்.

விளம்பரம்

iPhone 15 Pro ஸ்பெசிஃபிகேஷன்கள்:

6.1-இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே கொண்ட இந்த டிவைஸ் நீடித்த மற்றும் லைட்வெயிட் கிரேடு 5 டைட்டானியம் ஃபிரேமை கொண்டுள்ளது. இந்த டிவைஸில் எப்போதும் பக்கவாட்டில் இருக்கும் மியூட் ஸ்விட்ச்சிற்கு பதில் ஆக்ஷன் பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது. இது கேமரா, ஃபிளாஷ்லைட் அல்லது குறிப்பிட்ட ஆப்ஸ்கள் போன்ற அம்சங்களை விரைவாக யூஸர்கள் அணுக உதவுகிறது.

இதையும் படிக்க:
Nvidia –க்காக சூப்பர் சிப்கள் உற்பத்தி… மெக்சிகோவில் ஃபேக்டரி அமைக்கும் ஃபாக்ஸ்கான்…

விளம்பரம்

6-கோர் GPU உடன் இணைக்கப்பட்டுள்ள A17 Pro சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது அன்றாட பணிகள் மற்றும் ஹெவி-கிராபிக்ஸ் அப்ளிகேஷன் பயன்பாடு என இரண்டிலும் சிறந்து விளங்குகிறது. iOS 18 உடன் வெளிவரும் வரவிருக்கும் Apple Intelligence அம்சங்களையும் இந்த ஃபோன் சப்போர்ட் செய்கிறது.

iPhone 15 Pro பல ஃபோகல் லென்த் (24 மிமீ, 28 மிமீ மற்றும் 35 மிமீ) கொண்ட 48 மெகாபிக்சல் பிரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் இதில் ஈர்க்கக்கூடிய ஜூம் திறன்களை வழங்கும் 3x டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளது. இதன் டிஸ்ப்லேவை பாதுகாக்க செராமிக் ஷீல்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மற்றொரு முக்கிய அப்கிரேட் USB-C சார்ஜிங் ஆகும்.

விளம்பரம்

இதையும் படிக்க:
OPPO India தீபாவளி சேல்ஸ்… ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி ஆஃபர் அறிவிப்பு… இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

ஏன் இந்த டீலை மிஸ் செய்யக்கூடாது.?

சமீபத்தில் ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் அறிமுகமானது. இது ஒரு பெரிய டிஸ்ப்ளே, மேம்படுத்தப்பட்ட 5x டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் A18 ப்ரோ சிப் போன்ற குறிப்பிடத்தக்க அம்சங்களோடு வந்தாலும் குறைந்த விலையில் கிடைப்பதால் ஐபோன் 15 ப்ரோ இதற்கு ஒரு மாற்று விருப்பமாக உள்ளது. சிறந்த செயல்திறன், வலுவான கேமரா சிஸ்டம் மற்றும் உயர்தர காட்சி ஆகியவற்றுடன் மிகவும் சக்திவாய்ந்த ஸ்மார்ட் ஃபோன்களில் ஒன்றாக ஐபோன் 15 ப்ரோ இன்னும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சாஃப்ட்வேர் அப்கிரேட்ஸ் மற்றும் Apple Intelligence integrations வழங்கப்படும் என்பதால் இதன் யூஸர்கள் சில லேட்டஸ்ட் அப்டேட்ஸ்களை பெறுவார்கள் என்பது உறுதி.

விளம்பரம்

இதையும் படிக்க:
Infinix Zero 40 | அசத்தல் அம்சங்களுடன் புதிய 5ஜி மொபைலை இந்தியாவில் அறிமுகப்படுத்திய இன்ஃபினிக்ஸ் நிறுவனம்! – விலை எவ்வளவு தெரியுமா?

மேலும், ஆப்பிள் தனது அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் ஐபோன் 15 ப்ரோவின் விற்பனையை நிறுத்தியுள்ளது. எனவே Flipkart போன்ற இ-காமர்ஸ் தளத்தில் iPhone 15 Pro ஐ வாங்குவதற்கான கடைசி வாய்ப்பாக இது இருக்கலாம். சுருக்கமாக சொன்னால் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே iPhone 15 Pro கிடைக்கும்.

விளம்பரம்

.



Source link