புகைப்படங்களை உருவாக்குவதில் கூகுளின் இந்த புதிய அப்டேட் AI தொழில்நுட்பத்தில் மற்ற நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க போட்டியாக மாறியிருக்கிறது.

கூகுள் தனது AI தளமான ஜெமினிக்கு இமேஜன் 3 மாடலைச் சேர்த்ததன் மூலம் ஒரு பெரிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட் மூலம் AI மூலம் விரிவான தகவலுடன், எதார்த்தமான மற்றும் துல்லியமான படங்களை உருவாக்க முடியும். இந்த புதிய வசதியை ஜெமினி பிளாட்ஃபார்மின் கட்டண மற்றும் இலவச பயனர்கள் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

இமேஜன் 3 மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன?

இமேஜன் 3 என்பது AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படங்களை உருவாக்க வடிவமைக்கப்பட்ட கூகுளின் சமீபத்திய மற்றும் மிகவும் மேம்பட்ட மாதிரியாகும். இது புகைப்படங்களை தத்ரூபமாக உருவாக்க பயன்படுகிறது.

கூகுளின் கூற்றுப்படி, அதன் முந்தைய மாதிரிகளுடன் ஒப்பிடும்போது இமேஜன் 3 மூலம் விரிவான தகவல், வண்ணங்கள் மற்றும் நிஜ வாழ்க்கைத் தரத்தில் மேம்பட்ட புகைப்படங்களை உருவாக்க முடியும். மேலும் இந்த AI மாடல் மூலம், ஆயில் பெயிண்டிங் முதல் க்ளே பெயிண்டிங் என பலவிதமான ஆக்கப்பூர்வமான புகைப்படங்களை உருவாக்க வழி செய்கிறது.

விளம்பரம்

மேலும், இமேஜன் 3 மூலம் 2048 x 2048 ரெசலூசனில் புகைப்படங்களை உருவாக்க முடியும். மாறாக மெட்டா AI 1280 x 1280 ரெசலூசனில் புகைப்படங்களை உருவாக்கித் தருவதால் மற்ற AI மாடல்களிலிருந்து இது குறிப்பிடத்தக்க மேம்பட்ட அம்சத்துடன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பயனர்கள் தங்கள் புகைப்படங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்ய புதிய வசதியும் இணையக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக நிகான் DSLR தோற்றம் அல்லது வைட் ஆங்கிள் லென்ஸ் மூலம் எடுக்கப்படும் புகைப்படம் போன்ற தோற்றம் வேண்டுமெனில், அதனை குறிப்பிட்டு இந்த அம்சங்களைப் பெற முடியும். இமேஜன் 3-ன் இந்த அம்சம் சாதாரண யூசர்கள் மற்றும் நேர்த்தியான புகைப்படங்களை எடுக்கும் வல்லுநர்கள் என இருவருக்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

விரிவாக்கப்பட்ட அம்சங்கள்:

இந்த புதிய அப்டேட் ஜெமினியின் பயன்பாட்டை பாதிக்காமல், ஜெமினி API க்கும் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. டெவலப்பர்கள் இமேஜன் 3 மூலம் புகைப்படங்களை உருவாக்கும் திறனை மேம்படுத்தும் விதமாக, தாங்கள் வேலை செய்யும் ஆப்ஸ்கள் மற்றும் பிளாட்பார்முடன் இணைக்கவும் இது வழிவகை செய்கிறது.

இதையும் படிக்க:
உங்க மொபைலில் நெட் தீர்ந்துவிட்டதா? – இலவசமாக டேட்டாவை பெற இந்த எண்ணிற்கு டயல் பண்ணுங்க!

இந்த பரந்த நடைமுறையால், தங்களுக்கு விருப்பத்திற்கு ஏற்ப புகைப்படங்களை எளிதாக மாற்றம் செய்ய முடியும். ஆக்கப்பூர்வமான மற்றும் நடைமுறை பயன்பாடுகளுக்கான AI புகைப்படங்களை உருவாக்குவதன் மூலம் பல்வேறு துறைகளில் சந்தைப்படுத்தல் முதல் கேம்களை மேம்படுத்துதல் வரை இதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க முடியும்.

விளம்பரம்

ஜெமினி யூசர்கள் அனைவரும் இமேஜன் 3 மூலம் தாங்கள் உருவாக்க நினைக்கும் புகைப்படம் பற்றிய குறிப்புகளை அளிப்பதன் மூலம் அனைத்து விதத்திலும் அதனை சோதனை செய்து பார்க்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த இமேஜன் 3ஐ மேனுவலாக இயக்க வேண்டிய அவசியமில்லை, மேலும் இந்த புதிய மாடலைப் பயன்படுத்தி படங்களை தானாகவே உருவாக்க முடியும்.

எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் கூகுளால் பகிரப்பட்ட பதிவில், இமேஜென் 3 புகைப்படங்களில் தேவையற்ற கூறுகளை குறைவாகவே பயன்படுத்துகிறது மற்றும் பயனரின் குறிப்புகளை மிகவும் துல்லியமாக பின்பற்றுகிறது என்று தெரிவித்துள்ளது. எந்த AI மாதிரியும் சரியானதாக இல்லை என்றாலும், கூகுளின் கவனம் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதிலும், பெரும்பாலும் யதார்த்தத்தை உருவாக்குவதிலும் உள்ளது. புகைப்படங்களை உருவாக்குவதில் கூகுளின் இந்த புதிய அப்டேட் AI தொழில்நுட்பத்தில் மற்ற நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க போட்டியாக மாறியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

விளம்பரம்

இதையும் படிக்க:
UPI-ல் இனி இவ்வளவு ரூபாய் வரை ட்ரான்சாக்ஷன் பண்ணலாம்… அதிகபட்ச லிமிட்டை அதிகரித்த RBI..!

பாதுகாப்பு மற்றும் வாட்டர் மார்க்கிங்:

டீப்ஃபேக்குகள் மூலம் AI தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் அதனை கருத்தில் கொண்டு, இதுபோன்ற கவலைகளைக் போக்கும் விதமாக, இமேஜன் 3 மூலம் தயாரிக்கப்படும் அனைத்துப் புகைப்படங்களுக்கும் SynthID ஐ கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த SynthID புகைப்படத்தின் பிக்சல்களுக்குள் கண்ணுக்குத் தெரியாத ஓர் வாட்டர்மார்க்கை உருவாக்குகிறது, இது AI-உருவாக்கிய லேபிளாகச் செயல்படும் தொழில்நுட்பமாகும். இந்த வாட்டர்மார்க் ஒரு புகைப்படத்தில் இருக்கும் பட்சத்தில் அதனை ஸ்கிரீன்ஷாட் செய்யும் போது கூட அது நீடிக்கிறது, மற்றும் இந்த ஐடியை அகற்ற முடியாது. எனவே இது வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்து, AI-உருவாக்கிய புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

விளம்பரம்

இந்த பாதுகாப்பு அம்சம் பொறுப்பான AI தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். அவை உண்மையான புகைப்படத்திலிருந்து வேறுபடுத்தப்படலாம், இது யூசர்கள் மற்றும் டெவலப்பர்கள் இருவருக்கும் இந்த தளத்தைப் பயன்படுத்துவதில் நம்பிக்கையை அளிக்கிறது.

இதையும் படிக்க:
இந்த பிரவுசர் யூசர்களா நீங்கள்..? மத்திய அரசு எச்சரிக்கை

Imagen 3ஐ பயன்படுத்துவது எப்படி?

கூகுள் கணக்கு இருக்கும் எவரும் இமேஜன் 3-ஐ நேரடியாக பயன்படுத்த முடியும். பயனர்கள் இணையம் அல்லது மொபைல் வழியாக ஜெமினி இயங்குதளத்தை அணுகலாம். பின்னர் டெஸ்கிரிப்ஷனில் உங்களுக்கு தேவையான புகைப்படத்தை உருவாக்க தேவையான நகலை வழங்க வேண்டும். அந்த விளக்கத்தின் அடிப்படையில் AI-ஐ பயன்படுத்தி நாம் புகைப்படத்தை உருவாக்க முடியும். இமேஜன் 3 மாடல் எந்த கூடுதல் அமைப்பும் இல்லாமல் தெளிவான புகைப்படங்களை உருவாக்க வழி செய்கிறது.

.



Source link