பாரத ஸ்டேட் வங்கி (SBI), HDFC வங்கி மற்றும் ICICI வங்கி ஆகியவை இந்திய ரிசர்வ் வங்கியால் உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியமான வங்கிகளாக (D-CBs) அறிவிக்கப்பட்டுள்ளன. டி-எஸ்ஐபிஎஸ் வங்கிகளின் பட்டியலை கடந்த 13ஆம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்டது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தனித்துவமான பங்கை வகிக்கின்றன.
சில வங்கிகள் பொருளாதாரத்தில் தங்கள் பங்கை எடுத்துக் கொள்கின்றன. இது போன்ற 3 முன்னணி வங்கிகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Also Read:
Gold Rate: வாரத்தின் முதல் நாளே அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..! இன்றைய ரேட் என்ன தெரியுமா?
மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) மற்றும் இரண்டு தனியார் துறை நிறுவனங்களான ICICI வங்கி மற்றும் HDFC வங்கி ஆகியவை 2024ஆம் ஆண்டில் பாதுகாப்பான வங்கிகளாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மூன்று வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கியால் உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியமான வங்கிகளாக (D-SIB) அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. D-SIBS பட்டியலில் உள்ள வங்கிகள் உள்நாட்டு அமைப்புக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இது தவிர, நாட்டின் பாதுகாப்பான வங்கியாகவும் இது கருதப்படுகிறது. இந்த வங்கிகள் அமைப்புக்கு மிகவும் முக்கியமானவை, அவற்றின் சரிவு முழு பொருளாதாரத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கக்கூடும். இவ்வளவு முக்கியமான வங்கிகளான இவைகளுக்கு ஏதாவது நேர்ந்தால், அரசாங்கமே காப்பாற்ற முயற்சிக்கும்.
மார்ச் 31, 2024 வரை உள்ள டேட்டாக்களின் அடிப்படையில் டி-எஸ்ஐபிஎஸ் வங்கிகளின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி தயாரித்துள்ளது. உள்நாட்டு அமைப்புக்கு முக்கியமானதாக அறிவிக்கப்பட்ட வங்கிகள் காமன் ஈக்விட்டி டயர் 1 (CET1) மூலதனம் எனப்படும் கூடுதல் நிதியையும் பராமரிக்க வேண்டும். இழப்பு அல்லது ஆபத்தைத் தவிர்க்க இந்த மூலதனம் அவசியம். இந்த கூடுதல் மூலதனத்தின் அளவு ரிசர்வ் வங்கியின் பட்டியலில் உள்ள வங்கிக்கு ஏற்ப மாறுபடும்.
இந்திய ரிசர்வ் வங்கி, உள்நாட்டு அமைப்பிற்கான குறிப்பிடத்தக்க வங்கிகளின் பட்டியலை தயாரிக்கும் கருத்தை முதன்முதலில் ஏற்றுக்கொண்டது 2014ஆம் ஆண்டில் தான். 2015ஆம் ஆண்டில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் அடுத்த ஆண்டு அதாவது, 2016இல், ஐசிஐசிஐ வங்கி இந்தப் பட்டியலில் இடம்பெற்றது மற்றும் HDFC வங்கி 2017இல் பட்டியலில் நுழைந்தது.
இதையும் படிக்க:
ஃபிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை குறைத்த Yes வங்கி!!!
எந்த வங்கி எந்த பக்கெட்டில் உள்ளது?
இந்த முறை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவை பக்கெட்-4ல் ரிசர்வ் வங்கி வைத்துள்ளது, இதன் கீழ் 0.80 சதவீதம் கூடுதல் CET1ஐ பராமரிக்க வேண்டும். இதனுடன், எச்டிஎஃப்சி வங்கியும் பக்கெட் 2இல் வைத்துள்ளது, இதன் கீழ் 0.40 சதவிகிதம் கூடுதல் CET1ஐ பராமரிக்க வேண்டும் மற்றும் ICICI வங்கி பக்கெட் 1இல் வைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் 0.20 சதவிகிதம் கூடுதல் CET1ஐ பராமரிக்க வேண்டும். புதிய விதிகள் 1 ஏப்ரல் 2025 முதல் அமலுக்கு வரும்.
.