ரியல் எஸ்டேட் சந்தையில் ஐதராபாத்தின் வேகமான வளர்ச்சி, இந்தியாவின் 6 முக்கிய நகரங்களை விட அதனை முன்னேற செய்ததன் மூலம், வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் வலுவான உள்கட்டமைப்புடன் அதிக மதிப்பெண்களைப் பெற்றுத் தந்துள்ளது.
இந்தியாவின் ஆறு முன்னணி நகரங்களில், ஹைதராபாத் வலுவான உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் அதிகரித்து வரும் ரியல் எஸ்டேட் தேவை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக விளங்குவதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இதற்கிடையில், மும்பை-எம்எம்ஆர் அனைத்து அளவீடுகளிலும் நிலையான வளர்ச்சியைப் பராமரித்து, இந்தியாவின் நிதித் தலைநகராக அதன் இடத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது, மேலும் டெல்லி-என்சிஆர் அதன் சிறந்த கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்று நைட் ஃபிராங்க் இந்தியாவின் ‘இந்தியா பிரைம் சிட்டி இன்டெக்ஸ்’ அறிக்கை தெரிவிக்கிறது.
மறுபுறம், பெங்களூரு குறிப்பிடத்தக்க சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. இது செழிப்பான சேவைத் துறையால் இயங்கி வருகிறது. இது இந்தியா முழுவதிலும் மற்றும் அதற்கு அப்பால் இருந்து அதிக திறன் கொண்ட பணியாளர்களை ஈர்க்கிறது.
“பொருளாதார மற்றும் கலாச்சார மையங்களாக மாற்றப்பட்ட நகரங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவின் அபரிமிதமான செயல்திறனால் உலகளாவிய பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ஆறு நகரங்களில் ஒவ்வொன்றும் நாட்டில் நிலையான மற்றும் உள்ளடக்கிய நகர்ப்புற வளர்ச்சியை உருவாக்க தனித்தனி வாய்ப்புகளுடன் உள்ளன” என்று நைட் ஃபிராங்க் இந்தியாவின் மூத்த நிர்வாக இயக்குனர் குலாம் ஜியா கூறியுள்ளார்.
இந்த 6 நகரங்களுக்கான ஒப்பீட்டில், ஐதராபாத்தின் பலம் அதன் வளர்ந்துவரும் ரியல் எஸ்டேட் சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்க வைத்துள்ளது. ரியல் எஸ்டேட் அளவுருவில் உள்ள ஆறு நகரங்களில் ஐதராபாத் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், குடியிருப்புப் பகுதிகளில் 10 சதவீத வளர்ச்சி விகிதத்தை (CAGR) நகரம் கண்டுள்ளது.
இதையும் படிக்க:
உங்க லோன் அப்ளிகேஷனை ரிஜெக்ட் பண்ணிட்டாங்களா…? அப்படின்னா அடுத்து நீங்க இத தான் பண்ணனும்!!!
ரியல் எஸ்டேட்டில் பெங்களூரு இரண்டாவது இடத்தில் இருந்தாலும், வணிகரீதியான ரியல் எஸ்டேட்டுக்கான சிறந்த தேர்வாக பெங்களூரு நிலையான வளர்ச்சியுடன் இருப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. இந்த நகரம் நாட்டிலேயே 76 சதவிகிதத்துடன் மிக உயர்ந்த தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தைக் கொண்டுள்ளது மற்றும் வேலையின்மை விகிதத்தில் மிகக் குறைவாக 1.8 சதவிகிதத்தில் உள்ளது. இது பகுப்பாய்வு செய்யப்பட்ட ஆறு நகரங்களையும் விட மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:
ரூ.120 கோடி நன்கொடை வழங்கி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த பிரபலம்… யார் தெரியுமா?
மறுபுறம் சிறந்த உள்கட்டமைப்புக்கான தரவரிசையில் டெல்லி முன்னணியில் உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மெட்ரோ நெட்வொர்க்கின் தாயகமான, டெல்லி மெட்ரோ தினசரி 6.8 மில்லியன் பயணிகளைக் கொண்டுள்ளது மற்றும் 350 கி.மீ.களுக்கு மேல் பரவி உள்ளது. இது தேசிய தலைநகர் பகுதி (NCR) முழுவதும் தடையற்ற இணைப்பை உறுதி செய்கிறது.
.