Last Updated:
உலக அளவில் அதிக வசூல் செய்த படமாக ரூ. 2070 கோடி வசூலித்த ஆமிர்கானின் தங்கல் படம் உள்ளது.
இந்திய அளவில் அதிக வசூல் செய்த படங்களின் லிஸ்டில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. முன்னதாக 2017-ல் வெளியான பாகுபலி 2 திரைப்படம் முதல் இடத்தில் இருந்து வந்தது. ஒரு படத்துடைய முதல் பாகம் சூப்பர் ஹிட்டானால் அந்த படத்துடைய 2-ஆம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் காணப்படும்.
அதே நேரம் வசூலிலும் இரண்டாவது பாகம் முதல் பாகத்தை விட அதிகம் அள்ளிக் குவிக்கும். இதற்கு பாகுபலி 2, கே.ஜி.எஃப் 2 படங்கள் ஓர் உதாரணம். இந்நிலையில் புஷ்பா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அந்த படத்தின் 2-ஆம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்டது. புஷ்பா முதல் பாகம் 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
ஒடிடி தளங்களிலும் இந்த படத்தை மீண்டும் மீண்டும் ரசிகர்கள் பார்த்தனர். படத்தில் இடம்பெற்ற காட்சிகள், பாடல்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின. பிரபலங்கள் பலரும் புஷ்பா படத்துடைய பாடல் காட்சிகளுக்கு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்ததால் இந்த படத்துடைய இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்துடைய வெளியீடு டிசம்பர் 5ஆம் தேதி தள்ளிப் போனது. புஷ்பா 2 திரைப்படத்திற்கு ரிலீஸ் ஆன முதல் நாளிலிருந்து பாசிட்டிவான விமர்சனங்கள் வரத் தொடங்கின.
படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததால் வசூலை அள்ளி குவிக்க தொடங்கியது. தெலுங்கு மொழி மாநிலங்களை தவிர்த்து இந்தி மொழி பேசும் மாநிலங்களிலும் புஷ்பா 2 படத்திற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக பாலிவுட் படங்களை காட்டிலும் புஷ்பா 2 படம் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
இந்த நிலையில் இந்தியாவில் அதிக வசூலை குவித்த திரைப்படம் என்ற சாதனையை புஷ்பா 2 ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் இந்த திரைப்படம் சுமார் 1800 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் இந்த திரைப்படம் 1200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க – Suriya 45 | ரஜினி…விஜய் பட டைட்டில் மிக்சிங்.. சூர்யா 45 படத்தின் டைட்டில் என்ன?
2017இல் வெளியான பாகுபலி 2 திரைப்படம் இந்தியாவில் மட்டும் 1030 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்திருந்தது. மூன்றாவது இடத்தில் 860 கோடி ரூபாய் வசூல் உடன் கேஜிஎப் 2 படமும், இதற்கு அடுத்தடுத்த இடங்களில் ஆர்.ஆர்.ஆர், கல்கி, ஜவான், ஸ்த்ரீ 2, அனிமல், பதான், காடர் ஆகிய படங்களும் உள்ளன. உலக அளவில் அதிக வசூல் செய்த படமாக ரூ. 2070 கோடி வசூலித்த ஆமிர்கானின் தங்கல் படம் உள்ளது.
January 07, 2025 5:45 PM IST