இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்தும் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. இதில், சுமார் 80 கோடி ரூபாய் வருமான வரி செலுத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய் இந்திய அளவில் 2-ஆவது இடத்தில் இருக்கிறார்.
2023-24ஆம் நிதியாண்டில் பெறப்பட்ட விபரங்களின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன. பிரபலங்கள் ஏராளமான பணத்தையும் சொத்துக்களையும் குவித்தாலும், அவர்கள் இந்தியப் பொருளாதாரத்தில் கணிசமான அளவு பங்கு செலுத்துபவர்களாக உள்ளனர். அந்த வகையில், 2023-24ஆம் தேதி ஆண்டில் மிக அதிகமான வருமான வரி தொகை செலுத்திய நபர்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடத்தில் இருக்கிறார்.
இவர் சுமார் 92 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் விஜய் சுமார் ரூ. 80 கோடி வருமான வரி தொகை செலுத்தி 2-ஆம் இடத்தில் இருக்கிறார். ரூ. 75 கோடியுடன் சல்மான்கான் மூன்றாம் இடத்திலும், 71 கோடி ரூபாய் தொகையில் அமிதாப் பச்சன் நான்காம் இடத்திலும், கிரிக்கெட் வீரர் விராட் கோலி 66 கோடி ரூபாய் வருமான வரி தொகையுடன் 5-ஆம் இடத்திலும் உள்ளனர்.
இந்த பட்டியலில் பெரும்பாலானோர் பாலிவுட் பிரபலங்களாக இருக்கின்றனர். அஜய் தேவகன், ரன்பீர் கபூர், ஹ்ரித்திக் ரோஷன், சாகித் கபூர், பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட திரைப் பல பிரபலங்கள் இந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளார்கள்.
கிரிக்கெட் உலகைப் பொறுத்தளவில் விராட் கோலி தான் மிக அதிகமான வருமான வரி செலுத்துபவராக இந்தியாவில் உள்ளார். இவர் சுமார் 66 கோடி ரூபாய் வருமான வரி செலுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் கேப்டனும், ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்து வருபவருமான, எம்.எஸ். தோனி 38 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி செலுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க – TVK : தவெகவில் இணைந்த ‘வாழை’ பட நடிகர்.. வாழ்த்து தெரிவித்த கட்சியினர்!
இந்த லிஸ்டில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் உள்ளிட்ட வீரர்கள் முன்னணி இடத்தில் உள்ளனர். ஆச்சரியம் அளிக்கும் வகையில், டிவி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் காமெடியனான கபில் சர்மா 26 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி செலுத்தி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
.