Last Updated:

ஒன்பிளஸ் 12 ஆனது பவர் பேக்கப்பிற்கான சக்திவாய்ந்த 5,400mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பெரிய பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

News18

‘ஒன்பிளஸ் 13’ சீரிஸ் இன்னும் சில நாட்களில் சந்தைக்கு வரவுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் உள்நாட்டு சந்தையில் வெளியிட அனைத்து ஏற்பாடுகளையும் நிறுவனம் செய்து வருகிறது. இந்நிலையில், அதன் முந்தைய பதிப்பான ‘ஒன்பிளஸ் 12’ ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது. அதாவது நிறுவனம் ரூ.5,000 முதல் ரூ. 7,000 வரை தள்ளுபடியை வழங்குகிறது.

இந்தியாவில் ஒன்பிளஸ் 12 விலை குறைப்பு…

நிறுவனம் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட் போனின் 12GB + 128GB பேஸ் வேரியண்ட்டின் விலை ரூ.64,999 என முடிவு செய்துள்ளது. அமேசான் தற்போது இந்த மொபைலுக்கு 8 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. அதாவது ரூ.5 ஆயிரம் தள்ளுபடியுடன் ரூ.59,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் ரூ.7,000 பிளாட் தள்ளுபடி கிடைக்கும். முழு தொகையும் செலுத்தாமல் EMI விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கும் இதே வசதி வழங்கப்படுகிறது. தற்போது அமேசான் இந்த மொபைலில் 3, 6 மற்றும் 9 மாதங்களுக்கு EMI விருப்பங்களை தேர்வு செய்யும் வசதியை கொண்டுள்ளது. அமேசான் வழங்கும் அனைத்து சலுகைகளையும் சேர்த்தால், ‘ஒன்பிளஸ் 12’ ஸ்மார்ட்போனை வெறும் ரூ.52,999க்கு வாங்கலாம்.

ஒன்பிளஸ் 12…

ஒன்பிளஸ் 12 ஆனது 1440 x 3168 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.82-இன்ச் LTPO AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளேவில் HDR10+, டால்பி விஷன், 120Hz ரெஃபிரேஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இதில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இது 16GB LPDDR5X ரேம் மற்றும் 512GB வரை UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான OxygenOS 14 மூலம் இயங்குகிறது.

கேமராவை பொறுத்த வரையில், ஒன்பிளஸ் 12 ஆனது டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் சோனி LYT-808 சென்சார் 50 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 64 மெகா பிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 48 மெகாபிக்சல் அல்ட்ராவைட் லென்ஸ் ஆகியவை உள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்காக 32 மெகா பிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளன.

ஒன்பிளஸ் 12 ஆனது பவர் பேக்கப்பிற்கான சக்திவாய்ந்த 5,400mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும், இந்த பெரிய பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வெறும் 11 நிமிடங்களில் 50 சதவிகிதம் வரை சார்ஜ் செய்துவிடலாம் என்றும், 26 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.



Source link