நிக்கோலஸ் க்ரோஸ்மி ஒரு பிரெஞ்சுக்காரர். இவர் பாரிஸ் பாணினி (Paris Panini) என்ற பெயரில் உயர்தரமான சாண்ட்விச் சங்கிலி தொடர் ஹோட்டலை நிறுவியவர். இவர் சமீப காலமாக இந்தியாவின் உணவுத் துறையில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக மாறியுள்ளார். சமீபத்தில், இன் YouTube வீடியோ ஒரு பிரெஞ்சு வணிக மாணவராக இருந்து வளர்ந்து வரும் உணவுத் தொழில்முனைவோராக மாறிய இவரது ஊக்கமளிக்கும் பயணத்தை யூடியூபில் பிரபல பிசினஸ் சேனல் GrowthX வீடியோவாக வெளியிட்டது. இவரது வெற்றிக்கான செய்முறையை இந்த வீடியோவில் நாம் நன்றாக பெற முடிகிறது.

விளம்பரம்

பிரான்சில் ஆசிரியர்கள் நிறைந்த எளிமையான குடும்பத்தில் வளர்ந்த நிக்கோலஸ், சமையலறையில் தனது தாய்க்கு உதவி செய்யும்போது சமையலில் தனக்கு மிகுந்த ஆர்வம் இருப்பதை கண்டுகொண்டார். உணவு மீதான இவரது ஆரம்பகால காதல் அவரது தொழில் முனைவோர் ஆசைகளுக்கு அடித்தளம் அமைத்தது என்று தாராளமாக சொல்லலாம். 22 வயதில் நிக்கோலஸ் முதுகலை பட்டப்படிப்பிற்காக இந்தியா வந்தார். குழந்தை பருவத்திலிருந்தே இவரது நினைப்பு முழுவதிலும் ரொட்டி மற்றும் சாண்ட்விச்கள் தான் நிரம்பியிருந்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு இந்திய உணவு சந்தையில் நல்ல உயர்தரமான சுவையுள்ள சாண்ட்விச்சை அறிமுகப்படுத்த விரும்பினார். இந்த முயற்சி இறுதியில் பாரிஸ் பாணினியை (Paris Panini) தொடங்குவதற்கு வழிவகுத்தது.

விளம்பரம்

தயாரிப்பை மையமாகக் கொண்ட பிராண்டிங்கில் கவனம் செலுத்தியதாலேயே வெற்றி பெற முடிந்ததாக கூறுகிறார் நிக்கோலஸ். “நீங்கள் மக்களுக்கு என்ன வழங்குகிறீர்கள் என்பதை உங்கள் பிராண்ட் பெயர் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்” என்று ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு அறிவுறுத்துகிறார். வலுவான பிராண்ட் அடையாளத்தை உருவாக்குவதில் நம்பகத்தன்மை மற்றும் தெளிவின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்துகிறார்.

தினசரி புரதத் தேவைக்கு எவ்வளவு பருப்பு போதுமானது.?


தினசரி புரதத் தேவைக்கு எவ்வளவு பருப்பு போதுமானது.?

GrowthX வீடியோவில், நிக்கோலஸ் உணவு விற்பனை கடையை நடத்துவதற்கான செலவு கட்டமைப்பைப் பற்றிய பல நுணுக்கமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். உணவிற்கான செலவுகள் சுமார் 28%, வாடகை 10%, வேலையாட்கள் சம்பளம் 15%, நிர்வாக செலவுகள் 10% மற்றும் சந்தைப்படுத்தல் 5-10%. இறுதியாக 15% லாபம் கிடைக்கிறது. வெற்றிகரமான உணவு வணிகத்தை நடத்துவதில் நிதியை எவ்வாறு செலவழிக்க வேண்டும் என்பதை பற்றிய தெளிவான பார்வையை இது வழங்குகிறது.

விளம்பரம்

ஜெர்சி மைக்கின் நிறுவனர் பீட்டர் கான்க்ரோவின் கதைகளோடு நிக்கோலஸின் பயணம் ஓரளவிற்கு ஒத்துப்போகிற்து. கான்க்ரோ 17 வயதில் பணியாற்றி வந்த சாண்ட்விச் கடையை, தனது கால்பந்து பயிற்சியாளரிடமிருந்து கடனாக பணத்தை பெற்று, அந்த ஹோட்டலை சொந்தமாக வாங்கினார். 2023-ம் ஆண்டில் 3.3 பில்லியன் டாலர் விற்பனையைக் குவித்து, உலகளாவிய அதிகார மையமாக ஜெர்சி மைக் உருவெடுத்துள்ளது. சாண்ட்விச் மற்றும் அவர்களின் குறிக்கோள் மீதான காதல் எப்படி எளிமையான தொடக்கங்களை வியக்க வைக்கும் அளவிற்கு வெற்றிகரமாக மாற்றுகிறது என்பதை இந்த இரண்டு கதைகளும் தெளிவுப்படுத்துகிறது.

விளம்பரம்

.



Source link