Last Updated:

Redmi Note 14 Series | நோட் 14 ப்ரோ ஆனது 12 ஏஐ அம்சங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிக்கைகளின்படி, நோட் 14 ப்ரோ ஆனது 8MP அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் சிக்ஸ் AI அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

News18

ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான சியோமி தனது புதிய ஸ்மார்ட் போன்களான ரெட்மி நோட் 14 சீரிஸ்-ஐ வரும் 9ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த சீரிஸில் ரெட்மி நோட் 14, ரெட்மி நோட் 14 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 14 ப்ரோ+ ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது அறிமுகத்திற்கு முன்பே, அவற்றின் விலை மற்றும் அம்சங்கள் தொடர்பான பல தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன. நிறுவனம் முதலில் இந்த ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் பின்னரே இந்தியாவில் அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ளது.

டெக் டிப்ஸ்டர் அபிஷேக் யாதவின் கூற்றுப்படி, ரெட்மி நோட் 14 சீரிஸ்-இன் வெவ்வேறு வகைகளின் விலைகள் பின்வருமாறு இருக்கலாம்…

ரெட்மி நோட் 14 இன் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.21,999 விலையிலும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.22,999 விலையிலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.24,999 விலையிலும் கிடைக்கலாம். அதே சமயம் ரெட்மி நோட் 14 ப்ரோ இன் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.27,999 விலையிலும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.30,999 விலையிலும் கிடைக்கலாம்.

இது மட்டுமின்றி, ரெட்மி நோட் 14 ப்ரோ+ இன் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.34,999 விலையிலும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.36,999 விலையிலும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.39,999 விலையிலும் இருக்கலாம்.

ரெட்மி நோட் 14 சீரிஸ் அம்சங்கள்:

ரெட்மி நோட் 14 ப்ரோ+ ஆனது சர்க்கிள் டு சர்ச், ஏஐ கால் டிரான்ஸ்லேஷன் மற்றும் ஏஐ சப்டைட்டில் போன்ற 20 ஏஐ திறன்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், நோட் 14 ப்ரோ ஆனது 12 ஏஐ அம்சங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிக்கைகளின்படி, நோட் 14 ப்ரோ ஆனது 8MP அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் சிக்ஸ் AI அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் வெண்ணிலா மாடல் ஆனது IP64 மதிப்பீட்டை கொண்டுள்ளது. அதே சமயம் ப்ரோ மாடல் ஆனது நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. இந்த ஃபோன்கள் ஆனது 120Hz ரெஃபிரேஷ் ரேட் உடன் 6.67 இன்ச் OLED டிஸ்பிளே வருகின்றன.

ரெட்மி நோட் 14 ப்ரோ மாடல் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது, ஆனால் ரெட்மி நோட் 14 ப்ரோ+ ஆனது ஸ்னாப்டிராகன் 7s ஜென் 3 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த பேஸ் வேரியண்ட் ஆன ரெட்மி நோட் 14 ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7025 அல்ட்ரா ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது என எதிர்பார்க்கப்படுகிறது.



Source link