சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் அதன் புதிய ஸ்மார்ட்ஃபோனான ரெட்மி A4 5ஜி ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அந்நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்ஃபோன் ஆகும். இந்த ஸ்மார்ட்ஃபோனானது ஸ்னாப்டிராகன் 4s ஜென் 2 ப்ராஸஸர் மூலம் இயக்கப்படுகிறது.
இந்த சிப்செட்டில் இயங்கும் இந்தியாவில் முதல் ஸ்மார்ட்ஃபோன் இதுவாகும் என்று நிறுவனம் கூறியுள்ளது. ரூ.10,000க்கும் குறைவான விலையில் 5G ஸ்மார்ட்ஃபோனை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு, இந்த ஃபோன் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.
இந்தியாவில் ரெட்மி A4 5G விலை:
இந்தியாவில் ரெட்மி A4 5G ஸ்மார்ட்ஃபோனின் 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி பேஸ் வேரியண்ட் விலை ரூ.8,499 முதல் தொடங்குகிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி டாப் வேரியண்ட் விலை ரூ.9,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்ஃபோனின் விற்பனை நவம்பர் 27ஆம் தேதி தொடங்குகிறது. சியோமி ஆனது ஸ்டாரி பிளாக் மற்றும் ஸ்பார்க்கிள் பர்பிள் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் இந்த ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தி உள்ளது.
ரெட்மி A4 5G அம்சங்கள்:
ரெட்மி A4 5G ஸ்மார்ட்ஃபோனில் 120 ஹெர்ட்ஸ் ரெப்பிரேஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.68 இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ரெட்மி A4 5G ஆனது கிளாஸ் பாடி உடன் 8.2mm திக்நெஸ் மற்றும் 212 கிராம் எடையுடன் வருகிறது. மேலும் இதில் 5,160mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜெனரல் 2 சிப்செட் மூலம் இயங்குகிறது, மேலும் இது மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் எக்ஸ்பான்டபிள் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படிக்க:
ரூ.10,000 வரை தள்ளுபடியுடன் கிடைக்கும் OnePlus 12 மொபைல்…!
கேமராக்களை பொறுத்தவரையில், 50MP ரியர் கேமரா மற்றும் 5MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. பட்ஜெட் ஃபோனாக இருந்தாலும், இந்த ஸ்மார்ட்ஃபோன் உடன் ஹெட்ஃபோன் ஜாக்-கும் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்ஃபோனிற்கு இரண்டு ஆண்டுகள் OS அப்டேட், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஃபோனில் லாக் மற்றும் அன்லாக் செய்ய பிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Hyper OS மூலம் இயங்குகிறது. இது 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், 5G SA, Wi-Fi 5, புளூடூத் 5.3, GPS + GLONASS, USB டைப்-C போர்ட் போன்ற இணைப்பு விருப்பங்களை வழங்குகிறது.
.