Last Updated:

சீனா, தைவான், நேபாள் மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் டெல்லி, பீஹார், உபி, உள்ளிட்ட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.

நிலநடுக்கம்

திபெத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பிகார் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

திபெத்தின் ஷிஜாங் பகுதியில் இன்று காலை 6.35 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் ஏழு புள்ளி ஒன்றாக பதிவானது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு முறை நில அதிர்வுகள் உணரப்பட்டது. இதனால், ஏராளமான குடியிருப்புகள், வணிக வளாகங்கள் தரைமட்டமாகின.

அதைத்தொடர்ந்து மீட்பு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

கட்டட இடிபாடுகளில் சிக்கி 53 பேர் உயிரிழந்தனர். 60 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிகப்பட்டுள்ளனர்.

அதேபோல நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் பல நகரங்களிலும் உணரப்பட்டது. குறிப்பாக நேபாளில் 5.8 முதல் 6.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.  அதேபோல சீனாவின் சிசாங் தன்னாட்சி பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் காலை 6.35 மணிக்கு ரிக்டர் அளவில் 7.1 ஆக நிலநடுக்கம் உலுக்கியது.

டெல்லியிலும் நில அதிர்வு

இந்த நிலையில் டெல்லியின் சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. பிகார், உத்தரபிரதேசம், அசாம் மற்றும் மேற்குவங்கத்திலும் நில அதிர்வு பதிவானது.

இதையும் படிங்க : 4 முறை அதிர்ந்த பூமி.. திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 32 பேர் பலி- உறக்கத்தில் பறிபோன உயிர்கள்!

குறிப்பாக பிகாரின் ஷியோஹர் பகுதியில் நிலநடுக்கத்தின் பாதிப்புகள் பரவலாக உணரப்பட்டன. கட்டடங்கள் குலுங்கியதுடன், சில வீடுகளின் மின்விசிறி, அலங்கார விளக்குகள் ஆடிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

தமிழ் செய்திகள்/உலகம்/

Earthquake | இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளை மிரட்டிய பயங்கர நிலநடுக்கம் : திபெத்தில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு





Source link